நெற் பயிரில் (Paddy) தாக்கும் பலவகைப் பூச்சிகளையும், அவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் பார்ப்போம்.
பச்சை தத்துப்பூச்சி
-
ஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
-
விளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
-
20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.
-
நாற்று நட்ட நாள் முதல் 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.
பழுப்புஇலை தத்துப்பூச்சி
-
பையூர் 3, கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
-
நடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கும் 30 சென்டி மீட்டர் இடைவெளி விட வேண்டியது கட்டாயம்.
-
தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல்.
-
விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
-
5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளிக்க வேண்டும்.
வெண் முதுகு தத்துப் பூச்சி
முட்டை ஒட்டுண்ணியான , அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.
மாவுப் பூச்சி:
-
நாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும்.
-
தாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.
நெல் கருநாவாய்ப் பூச்சி
-
களைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்.
-
தேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும்.
-
விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
-
கருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.
கதிர் கருநிற நாவாய்ப் பூச்சி
-
வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம்.
-
நொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.
நெல் தண்டுதுளைப்பான்
-
ரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
-
நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியைக் கிள்ளி எடுத்தல் வேண்டும்.
-
இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம்.
-
முட்டைகளை சேகரித்து அழித்தல்.
-
பாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல்.
-
டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30-வது மற்றும் 37-வது நாட்களில் விட வேண்டும்.
தகவல்
ச.சுப்பையன்
வேளாண்மை உதவி இயக்குநர்
கொள்ளிடம்
மேலும் படிக்க...
Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!
Share your comments