தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியில் துறை சார்பில் மக்காச்சோள படைப்புழுவிற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது.
புதிய வகைப் பூச்சிகள் (New types of insects)
அயல்நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருவி வரும் புதிய வகைப் பூச்சிகள் வேளாண் பெருமக்களுக்கு மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துவதுடன், வேளாண் பூச்சியியல் விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவும் உள்ளது.
மேலாண்மை உத்திகள் (Management strategies)
இத்தகைய பூச்சிகளில் ஒன்றான மக்காச்சோளப் படைப்புழு கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்காச்சோளத்தில் மிகப்பெரிய சேதத்தை விளைவித்து வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியில் துறையானது, இப்புழுவிற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை உத்திகளை வகுத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
ரூ.4.5 கோடி நிதி (Rs 4.5 crore fund)
இந்த மேலாண்மை உத்திகளை மேலும் மெருகேற்றுவதற்கும், அவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் உரிய ஆராய்ச்சிப்பணிக்காக தமிழக அரசு 4.5 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீ. குமார் வேளாண் பூச்சியயில்துறை விஞ்ஞானிகள் தொகுத்த கையேடுகளை வெளியிட்டுத் துவக்க உரை ஆற்றினார். அப்போது, புதிய வகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இத்தகைய கூட்டு முயற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் சுப்பிரமணியன் வெளிநாட்டில் இருந்து ஊடுருவிய பூச்சிகளுக்கான கூட்டுறவு முயற்கிள் குறித்து விளக்கினார்.
இதையடுத்து, கலந்துரையாடல்களின் மூலம் பலதரப்பட்ட கருத்துக்களும், விளக்கங்களும் பெறப்பட்டு மக்காச்சோளப் படைப்புழுவைக் கட்டுவதற்கான உத்திகள் வரையறுக்கப்பட்டன.
மேலும் படிக்க...
அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநராக விருப்பமா?- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!
ஒரு கப் தேநீர் 1,000 ரூபாய் - இங்கில்லை, கொல்கத்தாவில்!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!
Share your comments