1. தோட்டக்கலை

வாங்க விவசாயிகளே! நாவல் பழ சாகுபடி தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வோம்!

KJ Staff
KJ Staff
Learn Novel Fruit Cultivation Techniques for Farmers to Buy!
Credit : Life Berrys

நாவல் பழம் (Novel Fruit) ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால் இந்தியாவில் பயிரிடும் விகிதம் குறைந்த அளவு தான். ஏனெனில் சாகுபடி முறைகள் பற்றிய சரியான புரிதல் இல்லாதது, குட்டையான மற்றும் அதிக மகசூல் வகைகள் கிடைக்கப்பெறாதது ஆகியவையாகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி மற்றும் ராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் உயரமாக மற்றும் அழகாக தோற்றமளிக்கும். இம்மரத்தை சாலை ஒரங்களில் நிழலிற்காகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது.

மண் (Sand)

நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் (Clay) அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது.

பருவம் ( Season)

நாவல் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காலநிலையில் நன்கு வளரும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் வறண்ட வானிலை தேவைப்படுகிறது. மித வெப்ப மண்டல பகுதிகளில், மழைப் பொழிவு பழம் பழுக்கும் தருணத்தில் இருப்பதால் பழங்களின் எடை, நிறம் மற்றும் சுவை அதிகரிக்கும்.

புதிய விதைகளை விதைத்தால் முளைக்க சுமார் 10 முதல் 15 நாட்களாகும். நாற்றுகளை வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மார்ச்) அல்லது மழை காலத்தில் அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடலாம். வளைப்பதியம் கட்டுதல் மூலம் நாவலை இனப்பெருக்கம் செய்யலாம். ஆனால் இது வணிக ரீதியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த முறையில் தாய் மரத்திலிருந்து எடுத்த மரக் குச்சியை ஒரு தொட்டியில் வைத்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வளைப்பதியம் கட்டப்பட்டு ஒரு வருட நாற்றுகள் (Seedlings) உருவாக்கப்படுகின்றன. நல்ல வேர் பிடிப்பிற்கு இடைப்பட்ட மூடு பனியில் பதியம் பெறப்படுகிறது.

நடவு முறை (Plantation)

நாவல் ஒரு இலை உதிரா மரம். இவை வசந்தகாலம் (பிப்ரவரி - மார்ச்) மற்றும் மழைக்காலம் (ஜூலை - ஆகஸ்ட்) ஆகிய இரண்டு பருவங்களிலும் நடவு செய்யலாம். பிந்தையப் பருவத்தில் நடவு செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்தால் மே மற்றும் ஜூன் மாத வறட்சியை (Drought) தாங்கி வளருவது கடினமாக இருக்கும்.

Credit : Daily thanthi

விதைப்பு (Sowing)

நடுவதற்கு முன் விளைநிலத்தை சுத்தப்படுத்தி உழ வேண்டும். 1 x 1 x 1 மீ குழிகளை 10 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பொதுவாக, பருவமழைக்கு முன்பே குழிகள் தோண்டுவதை நிறைவு செய்ய வேண்டும். குழியில் 75% மேல் மணல் மற்றும் 25 % தொழுவுரம் அல்லது மட்கிய உரம் ஆகியவற்றை கலந்து நிரப்ப வேண்டும். பொதுவாக நாவல் மரம் நிழலுக்காக பண்ணை மற்றும் கிணற்றடிகளில் வளர்க்கப்படுகிறது. இங்கே இவை பழங்களைத் தவிர நிழலையும் வழங்குகின்றன.

உரங்கள்  (Fertilizers)

நாவலுக்கு பொதுவாக உரமிடுவதில்லை. ஆண்டுக்கு 19 கிலோ தொழுஉரம் இட வேண்டும். மரம் நன்கு வளரும் நிலையில் மரம் ஒன்றுக்கு 75 கிலோ அளிக்க வேண்டும். பொதுவாக, நாற்று மூலம் நட்ட செடி காய் பிடிக்க 8 முதல் 10 வருடமாகும். ஒட்டுக்கட்டுதல் மூலம் நட்ட செடி காய் பிடிக்க 6 முதல் 7 வருடமாகும். மண்ணில் அதிக ஊட்டசத்து (Nutrition) இருந்தால் இலைகள் அதிகமாக வரும், அதனால் காய் பிடிப்பதற்கு தாமதமாகும். இந்த மரங்களுக்கு உரம் மற்றும் பாசன அளவு மிகக் குறைவாக வழங்கப்பட வேண்டும். செப்டம்பர் - அக்டோபர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நிறுத்திவிட வேண்டும். இந்த முறை நாவலில் மொட்டு அரும்புவதற்கும், காய் பிடிப்பதற்கும் உதவுகிறது. சில சமயங்களில் இவையும் பயனுள்ளதாக இருக்காது. அந்த சமயம் வேரை கவாத்து செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் வளர்ச்சி மற்றும் காய் பிடிக்கும் அளவைக் கொண்டு உரத்தை அளிக்க வேண்டும்.

நீர் மேலாண்மை (Water Management)

ஆரம்ப காலத்தில், தொடர்ச்சியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பின்னர் பாசன இடைவெளியை குறைக்க வேண்டும். இளம் மரங்களுக்கு ஒரு ஆண்டில் 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் தேவைப்படும். வளர்ச்சி அடைந்த மரங்களுக்கு மே - ஜூன் மாதங்களில் 4 முதல் 5 முறை நீர்ப்பாசனம் போதுமானது. இலையுதிர் மற்றும் குளிர் மாதங்களில் மண் உலர்ந்த போது மட்டும் பாசனம் செய்தல் போதுமானது. இது குளிர் காலங்களில் பனியின் மோசமான விளைவுகளில் இருந்த மரத்தைக் காக்கும்.

ஊடுபயிர் (Intercropping)

நடவு செய்த ஆரம்ப ஆண்டுகளில், தோட்டத்தில் அதிக இடைவெளி காணப்படும் பொழுது அதற்கான ஊடுபயிராக (Intercropping) பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களை மழைக்காலங்களில் பயிரிடலாம். அப்படி செய்வதால் அன்றாடத் தேவைகளுக்கு உதவும்.

கவாத்து செய்தல் (Marching)

நாவலுக்கு வழக்கமான கவாத்து செய்தல் (Marching) தேவையில்லை. உலர்ந்த மற்றும் குறுக்குக் கிளைகளை நீக்க வேண்டும். தாவரத்தின் கிளைகளை தரைமட்டத்திலிருந்து 60 முதல் 100 செ.மீட்டரில் வளர விட வேண்டும். நாவல் மரம் பழங்களைக் கொடுக்க ஆரம்பித்து விட்டால், ஆண்டுதோறும் பழங்களை அளித்து நல்ல இலாபத்தை அள்ளித்தரும்.

ரா.வ. பாலகிருஷ்ணன்
Krishi Jagran

மேலும் படிக்க...

அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாப்பாக சேமிக்கும் வழிகள்

பலன்கள் பல அள்ளித் தரும் மஞ்சளின் மகிமைகள்!!

English Summary: Learn Novel Fruit Cultivation Techniques for Farmers to Buy! Published on: 14 September 2020, 07:07 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.