1. தோட்டக்கலை

லில்லி: ஆலங்கார மலர்களில் முதலிடம்; சாகுபடி செய்ய டிப்ஸ்

Deiva Bindhiya
Deiva Bindhiya

Lily: Top of ornamental flowers; Tips for cultivation

இந்தியாவில் வைபகவங்களுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் அலங்கார பூக்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் மலர் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு முன், புதிய விருப்பமாக அலங்கார மலர்கள் தோன்றியுள்ளன. இவை பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி விவசாயிகளும், இவற்றின் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். அத்தகைய அலங்கார மலர்களில் லில்லி மலர் முதலிடம் பிடிக்கின்றது.

இது ஒரு கவர்ச்சியான அலங்கார மலர் மற்றும் பல வண்ணங்களில் வருகிறது. இந்திய விவசாயிகள் அதை பயிரிடுவதன் மூலம் வருமானத்தின் புதிய கதவுகளைத் திறக்க கூடும்.

லில்லி ஒரு கவர்ச்சியான பூ என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மேலும் இந்த பூவின் தேவையும் அதிகரித்திருக்கிறது. விவசாயிகள் பாலி ஹவுஸில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்து வருகின்றனர். இதன் வணிகப் பயிர்ச்செய்கை, நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே செய்யப்படுகிறது. தற்போது ஆந்திரா, இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேச விவசாயிகள் மட்டுமே அல்லி பூக்களை பயிரிட்டு வருகின்றனர். இது தவிர, மகாராஷ்டிராவிலும் பயிரிடப்படுகிறது. இதை நீங்கள் எவ்வாறு பயிரிடலாம், அது தொடர்பான தகவல்களை, கீழே காணுங்கள்.

லில்லி மலர் சாகுபடி தொடர்பான தகவல்கள் (Information on lily flower cultivation)

லில்லி சாகுபடி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. முதல் கட்டத்தில், திசு வளர்ப்பு செயல்முறை மூலம் நாற்றங்கால் தயாரிக்கப்படுகிறது. இந்த வேலை பெரிய ஆய்வகங்கள் அல்லது நிறுவனங்களில் செய்யப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் நாற்றங்கால் அதாவது மரக்கன்றுகள் நடப்படும். தாவரங்கள் பூக்களை உற்பத்தி செய்யாமல் கிழங்குகளையே உற்பத்தி செய்கின்றன. மூன்றாவது கட்டத்தில், அந்த கிழங்குகளும் தொட்டிகளில் நடப்படுகின்றன. இவ்வாறு செய்த பின்பே, விவசாயிகள் பூக்களை பறிக்க நிலை வரும்.

லில்லி மலர் சாகுபடிக்கு சிறந்த நிலம் (Excellent land for lily flower cultivation)

மலைப்பாங்கான மாநிலங்களில் காலநிலை லில்லிகளுக்கு சாதகமானது. இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் திறந்த வெளியிலும், லில்லி சாகுபடி செய்யலாம். சமவெளியில் லில்லி சாகுபடிக்கு, பாலி ஹவுஸ் தேவை. பாலி ஹவுஸில் நடவு செய்ய, 2.5 கிலோ கோகோபீட், 2.5 கிலோ மண்புழு உரம், 2.5 கிலோ வைக்கோல் மற்றும் 5 கிலோ நிலக்கரி சாம்பல் தேவைப்படும். இதன் பிறகு இந்தக் கலவையில் நாற்றுகள் நடப்பட்டு விவசாயிகளுக்கு கிழங்குகள் கிடைக்கும்.

கிழங்கு உருவாக மூன்று மாதங்கள் ஆகும். இந்த நேரத்தில், நல்ல பராமரிப்பு தேவை மற்றும் சொட்டு நீர் பாசனம் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, கிழங்கு தயாராகிவிடும். கிழங்கு வேருடன் பிடுங்கப்படுகிறது.

லில்லி மலரின் கிழங்குகளுக்கான சந்தை (Market for lily flower tubers)

விவசாயிகள் லில்லி கிழங்குகளை விற்பனை செய்தும் சம்பாதிக்கின்றனர். விவசாயிகள் விரும்பினால், அவர்களும் கிழங்குகளை விற்று பெரும் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் கிழங்குகளை விற்க விரும்பவில்லை என்றால், அவற்றை தொட்டிகளில் நட்டு, பூக்களை வளர்த்து நேரடியாக விற்கவும். முன் குறிப்பிடப்பட்ட கலவையை நிரப்பிய பின்னர், மூன்று-மூன்று கிழங்குகளாக தொட்டிகளில் நடப்படுகின்றன. பின்னர் கிழங்கு கலவையுடன் மூடப்பட வேண்டும்.

நடவு செய்த உடனேயே தண்ணீர் தெளிப்பது அவசியம். 7 நாட்களுக்குப் பிறகு, பாலி ஹவுஸின் வெப்பநிலையை 20 முதல் 25 டிகிரி வரை சரிசெய்வது நல்லது. கிழங்கு நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு பச்சை மொட்டு தோன்றும் மற்றும் விரைவில் பூக்கள் பூக்கும்.

இந்தியாவில் லில்லி சாகுபடி மிகக் குறைந்த அளவிலேயே செய்யப்படுகிறது. இதனால், நிறுவனங்கள் விவசாயிகளுடன் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம், மேலும் சந்தைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் படிக்க:

மாநில மலர் மருத்துவ பொருட்கள் பட்டியலில் சேர்ப்பு: மத்திய அரசு அறிவுப்பு

PM-KUSUM: விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு, உடனே திருத்தவும்

English Summary: Lily: Top of ornamental flowers; Tips for cultivation

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.