இயற்கையோடு இணைந்த வாழ்வே என்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையாக இருக்கும். அதனால்தான் நம் மூதாதையர்கள் எப்போதும், இயற்கையை வணங்கியதுடன், அவற்றுடன் இணைந்த வாழ்வையே மேற்கொண்டனர். அதேநேரத்தில், இயற்கைக்கு ஊறு விளைவிக்காத வகையிலும் தம் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டனர்.
அப்படிப் பார்க்கும்போது, அவசர உலவில், இயந்திரமயமான இன்றைய வாழ்வில் நாம் சிக்கிக்கொண்டதால், நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றின் பெரும்பகுதி அதிகளவில் மாசடைந்துவிட்டன. இதன் விளைவாகவே, கொரோனோ வைரஸ் போன்ற கொடிய நோய்கள் பரவியிருப்பதாக எச்சரிக்கின்றன அறிவியல் ஆராய்ச்சிகள். ஆக நாம் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இயற்கையை பாதுகாக்கும் வழிகளை நாம் கையாள வேண்டியது அவசியம்.
அதே நேரத்தில், கொரோனோ ஊரடங்கால், வீட்டில் முடங்கிக் கிடக்கும் காலகட்டத்தில், மாடித் தோட்டத்தை அமைப்பதன் மூலம், நமக்குத் தேவையான காய்கறிகளை நாம் சாகுபடி செய்துகொள்ள முடியும். அதிலும் குறிப்பாக வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், காய்கறி செலவு கையைக் கடிக்காமல் இருக்குமல்லவா!.
மேலும் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, தரமான காய்கறிகளை நாம் உணவில் எடுத்துக்கொள்வதால், பல நோய்களுக்கும் குட்பை சொல்ல முடியும். முதலில் நம் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை சாகுபடி செய்வோம். பிறகு அதனை சந்தைப்படுத்தும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
மும்பை போன்ற நகரங்களில், குடிசைவாசிகள் கூட, தொட்டிகள் வைக்க இடமில்லாத நிலையிலும், தொட்டிகளைக் கயிற்றில் கட்டி, கூரையின் பக்கவாட்டில் உள்ள கம்பிகளில் தொங்கவிட்டு, தங்களுக்குத் தேவையான காய்கறிகளே தாங்களே பயிர்செய்துகொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
செடிகளுக்கு தண்ணீர் விடுவது, அவற்றை பராமரிப்பது போன்றவை நல்ல பொழுதுபோக்காக மட்டுமல்ல, உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது.
மேலும் அழகாக காய்கறிகள் காய்த்துத் தொங்கும் தோட்டத்தையும், அவற்றில் விளையாட வரும் குருவி மற்றும் அணில்களைப் பார்வையிடுவதும், நம் கவலைகளை மறக்கச் செய்யும்.
மாடித் தோட்டம் உருவாக்கும் வழிமுறைகள்
மொட்டை மாடிகளில், பால்கனிகளில், ஜன்னல் விளிம்புகளில் கூடத் தொட்டிகளில் வைத்தும் செடிகளை வளர்க்கலாம். மாடிகளில் வளர்க்க ஏதுவான ஓவல் வடிவமுள்ள தொட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
நல்ல விளைச்சலைப் பெற சத்துள்ள மண் அவசியம். ஏனெனில் செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்தும், காற்றில் இருந்தும் எடுத்துக்கொள்கின்றன. எனவே மணலுடன், செம்மண்ணும் கலந்த கலவையோடு, எலும்புத்தூள், சுண்ணாம்புத்தூள், வேப்பம்புண்ணாக்கு கலந்த கலவையைத் தொட்டிகளில் இடுவது நல்ல பலனைத் தரும்.
உரமாக மண்புழு உரம் அல்லது தொழு உரம் இடுவது சிறந்தது.
சில நகரங்களில், பழையக் கேன்கள், பாட்டில்கள் ,டப்பாக்கள் ஆகியவற்றின் குறுகிய வாய்ப்புறத்தில் இருந்து சற்று கீழே இறக்கி வெட்டிவிட்டு, அகலமான பகுதிகளை செடிகளை வளர்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
இனி மாடித் தோட்டத்தில் பயிரிடும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
அவரைக்காய்
அவரை பிஞ்சை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக்கொள்வது பித்ததைப் போக்குகிறது. இதில் உள்ள துவர்பு சுவை, ரத்தத்தை சுத்தமாக்குகிறது. ரத்த நாளங்களில் அதிகப்படியாக படியும் கொழுப்புகளைக் கரைக்க அவரைக்காய் உதவுவதால், இதய நோயாளிகள், தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது
அவரையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டுவர, அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும், தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்டவை அகலும்.
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் - அமைச்சர் காமராஜ்!
தொட்டி
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறைக் கழிவு ஒரு பங்கு ஆகியன கலந்த கலவையைக் கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
விதைத்தல்
நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளைத் தேர்ந்தெடுத்து, விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை என இரண்டு வகை உள்ளது. செடி அவரை வகைக்கு ஒரு தொட்டிக்கு 3 விதைகளை ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.
நீர்
விதைகளை விதைத்தவுடன் பூவாளியால், நீர் தெளிக்க வேண்டும். 3 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும்.
பந்தலிடும் முறை
மாடித் தோட்டத்தில் நான்கு சாக்குகளில் மணலைப் பரப்பி, ஒவ்வொன்றிலும் ஒரு மூங்கில் கம்பை ஊன்றி நான்கு மூலைகளில் வைத்துவிட்டால், அழகான பந்தல் ரெடியாகிவிடும். இதில், கம்பி அல்லது கயிறுகளை குறுக்கும், நெடுக்குமாகக் கட்டி கொடிகளைப் படர விட வேண்டும்.
உரம்
இயற்கை பூச்சிக்கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒருமுறை தெளிக்க வேண்டும். அதேநேரத்தில் வேப்பயிலைத் தூளை செடிக்கு ஒரு பிடி வீதம், செடியின் வேர்ப்பகுதியில் போட்டு கிளறி விடுவது அவசியம். இது அடி உரமாவும், பூச்சிக்கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாக்கும் முறைகள்
நுனிக் கிளைகளை கவாத்து செய்வதால், அதிக கிளைகள் தோன்றும். பூச்சி தாக்குதலைத் தவிர்க்க வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
அறுவடை
காய்கறிகளை முற்ற விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும். இது 3 முதல் 4 மாதம் வரை பலன் கொடுக்கும்.
இதேபான்று வெங்காயம், வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, எலுமிச்சைப்பளம் உள்ளிட்ட நமக்கு தேவையான காய்கறிகளை நமது மாடித் தோட்டத்தில் நாமே பயிரிட்டு பலனடையலாம்.
மேலும் படிக்க...
தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் - தடுப்பது எப்படி!!
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் புதிய திட்டம் !!
Share your comments