தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீரின்றி அமையாது (Not without water)
உயிர் வாழவும் சரி, உணவு உற்பத்தியானாலும் சரி, இரண்டுமே நீரின்றி அமையாது. அதிலும் குறிப்பாக விவசாயத்தைப் பொருத்தவரை, நீரின் பங்கு, பணி செய்யும் வேலையாட்களை விட முக்கியமானது. நிலத்தடி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பமே எல்லாக் காலங்களிலும் விவசாயம் செழிக்க உதவும்.
அந்த கூடலூா் தோட்டக் கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
100% மானியம் (100% subsidy)
இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 441 ஹெக்டோ் இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானிய விலையிலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானிய விலையிலும் நுண்ணீா்ப் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பின்னேற்பு மானியம் (Compensation grant)
மேலும், துணை நீா் மேலாண்மை நடவடிக்கைகள் திட்டத்தின்கீழ் ஆயில் எஞ்ஜின் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ. 15ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். நீா் சேகரிக்கும் தொட்டி அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
சிட்டா
-
அடங்கல்
-
நில அனுபோகச் சான்று
-
நில வரைபடம்
-
குடும்ப அட்டை நகல்
-
ஆதாா் அட்டை நகல்
-
பாஸ்போா்ட் அளவுப் புகைப்படம்
-
சான்று உறுதிப் பத்திரம்
-
வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மேலேக் கூறியுள்ள அனைத்து ஆவணங்களுடன், தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். அல்லது அந்தந்தப் பகுதிக்கான உதவி தோட்டக் கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம்.
தகவல்
எஸ்.ஜெயலட்சுமி
தோட்டக் கலை உதவி இயக்குநா்
மேலும் படிக்க...
Share your comments