மாடி தோட்டத்தில், செடி முருங்கை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா விளக்கி கூறினார். இது பற்றி இங்கு காண்போம்.
மாடித் தோட்டம் (Terrace Garden)
பெரியகுளம் - 1 ரக செடி முருங்கை, மாடி தோட்டத்திற்கு உகந்த ரகமாகும். இந்த செடியை, மாடி தோட்டம் மற்றும் நிலங்களில் சாகுபடி செய்யலாம். இந்த ரகம் விவசாயிகளுக்கு, சிறந்த ரகம் எனக் கூறலாம்.
கீரை மற்றும் முருங்கையில் வருவாய் ஈட்டலாம். வீட்டு தேவைக்கு விரும்புவோர், பெரியகுளம் - 1 ரக செடி முருங்கை மாடி தோட்டத்தில் சாகுபடி செய்யலாம். குறிப்பாக, செடி முருங்கை நுனியை அடிக்கடி உடைத்து விடுவதோடு, செடிகளுக்கு நீர் பாசனம் குறைவாக பராமரிக்க வேண்டும். அப்போது தான், செடி முருங்கையில் கூடுதல் மகசூல் பார்க்க முடியும்.
மேலும், செடிகளுக்கு நாம் இயற்கை உரமிட்டால், முருங்கை காய்கள் சுவையுடன் இருக்கும்; கீரைகளில் பூச்சி தாக்குதல் ஏற்படாது என அவர் கூறினார்.
தொடர்புக்கு:
கே.சசிகலா
89391 88682
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!
அரசு பானமாக மாறுமா தென்னீரா பானம்? தென்னை விவசாயிகள் கோரிக்கை!
Share your comments