1. தோட்டக்கலை

கால்நடைத் தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் நேப்பியர் புல் சாகுபடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : Agrifarming

கால்நடைகளுக்கு ஏற்படும் பசுந்தீவன பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, விவசாயிகள் நேப்பியர் புல் சாகுபடியை அதிகரித்துள்ளனர்.

தீவனத் தட்டுப்பாடு (Fodder shortage)

கோடை காலம் தொடங்கிவிட்டாலே, கால்நடைகளைப் பொருத்தவரை, தீவனம் என்பது திண்டாட்டத்திற்கு வந்துவிடும்.

பராமரிப்பது சிரமம் (Difficult to maintain)

நீண்ட நேரம் வெயிலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது நல்லதல்ல.
மாலை வேளைகளில் நிழற்பாங்கானப் பகுதிகளைத் தேடிச் சென்று மேய்ச்சலுக்கு விட வேண்டும். அவற்றைப் பராமரிப்பதும் சிரமம்.

நேப்பியர் புல் சாகுபடி (Napier grass cultivation)

அதேநேரத்தில், கால்நடைகளுக்குத் தீவனங்களைக் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழலும் ஏற்படும். இதனைக் கருத்தில்கொண்டு பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நேப்பியர் புல் சாகுபடியை அதிகரித்துள்ளனர்.

சவால் நிறைந்தது (Challenging)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில், விவசாயிகளின் முக்கிய உபதொழிலாக கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி உள்ளது. மாடு வளர்ப்பில் முக்கியமாக, ஆண்டு முழுக்க தீவனப்பற்றாக்குறை ஏற்படாமல் பராமரிப்பது சவால் நிறைந்தது.

தற்போது, கோடை வெயில் அதிகரித்து உள்ளதால் தோட்டங்களில் இயற்கையாக வளரும் பசுந்தீவனங்கள் வளர்வதில்லை.இதனால், பசுந்தீவன உற்பத்தியை, பயிர் சாகுபடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது கட்டாயமாகிறது.

கலப்பு நேப்பியர் புல் (Mixed Napier grass)

இதில், மலை புல் என அழைக்கப்படும், கலப்பு நேப்பியர் புல் ரகம், கால்நடை களின் பசுந்தீவன தேவையை ஈடு செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வகை புல் செழித்து வளர, அதிக குளிர்ச்சியும், ஈரப்பதமும் தேவை என்பதால், சுழலும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து கரணைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாயிகள் நம்பிக்கை (Farmers hope)

நேப்பியர் புல் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டைவிட தற்போது அதிகரித்திருப்பதால், கோடை காலத்தில் பசுந்தீவன தேவையைச் சமாளிக்கலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

கூடுதல் மகசூல் தரும் கலப்புப் பயிர் சாகுபடி!


வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

பயிர்கள் செழிக்க கோடை உழவு அவசியம் - விவசாயிகளுக்கு ஆலோசனை!

English Summary: Napier grass cultivation to alleviate fodder shortage! Published on: 18 March 2021, 08:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.