புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவைப் பருவத்திற்குத் தேவையான உரங்கள், அனைத்துத் தனியார் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சாகுபடி தீவிரம் (Intensity of cultivation)
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவருவதைத் தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உரத்தட்டுப்பாடு இல்லை (No compaction)
மேலும், தற்பொழுது மாவட்டத்தில் 4,800 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி, 2,700 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து, மக்காச்சோளம் போன்ற இதர பயிர்கள் சாகுபடி, 10,889 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி ஆகியவற்றுக்குத் தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது யூரியா 3,412 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி 647 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 1,699 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 3,080 மெட்ரிக் டன்களும் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.விவசாயிகள் உரங்களை வாங்கிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகள் கவனத்திற்கு (Attention Farmers)
-
தாங்கள் நெல் சாகுபடி மேற்கொள்ளும்போது மண்ளை அட்டைப் பரிந்துரையின்படி உரம் இட வேண்டும். தழைச்சத்து இடும்போது பிரித்து மேலுரமாக இட வேண்டும்.
-
குருணை வடிவிலான வேம்பு கலந்த யூரியாவை பயன்படுத்த வேண்டும்.
-
இதனால் உரச் செலவு குறைவதோடு பூச்சி/நோய்த் தாக்குதலின்றி நெற்பயிர் நன்றாக வளர்ந்து மகசூல் கொடுக்கும்.
-
உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக் கருவி மூலம் விநியோகம் செய்யப்படுவதால் விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்குச் செல்லும் போது, தங்கள் ஆதார் அட்டையைக் கொண்டுசென்று உரம் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
உரம் வாங்கும்போது கட்டாயமாக இரசீது கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
செலவைக் குறைத்து அதிக லாபம் (Reduce cost and make more profit)
எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களைப் பெற்று உரச் செலவினைக் குறைத்து அதிக இலாபம் பெறலாம்.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமாரின் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க...
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!
கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்
Share your comments