வடகிழக்குப் பருவமழை சாதகமாக இருந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் நெல் விளைச்சல் அதிகரித்திருப்பது விவசாயிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நெல் அதிக விளைச்சல் (High yield of paddy)
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ததால், நெல் விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து 30,000 டன் நெல் கொள்முதல் செய்தனர்.
விற்பனை மையங்கள் (Sales centers)
இதையடுத்து, சிவகங்கையில் அழகு மெய்ஞானபுரம், காளையார்கோவில் பகுதியில் விட்டனேரி, திருப்புத்தூர் ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ள வேளாண் விற்பனை மையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நெல் கொள்முதல் (Purchase of paddy)
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தனர்.
பணம் வரவில்லை (The money did not come)
நெல்லை கொள்முதல் செய்ததற்கான ரசீது வழங்கியும், இதுவரை அதற்கான பணத்தை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கவில்லை.
ரூ.40,000 வரை பாக்கி (Up to Rs. 40,000 left)
இது குறித்து, அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் கூறுகையில், பிப்ரவரி மாதம் நெல்லை கொள்முதல் செய்து ரசீது வழங்கினர். ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.40,000 வரை வரவு வைக்க வேண்டும். ஆனால், இன்று வரை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்கின்றனர்.
அரசு நிதி ஒதுக்கவில்லை (The government does not allocate funds)
மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது, அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. பணம் வந்ததும் விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும், என்றார்.
விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)
நெல்லைக் கொள்முதல் செய்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டதால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விரைவில், தங்களுக்குச் சேரவேண்டியப் பணத்தை, வங்கிக்கணக்கில் வரவு வைக்கவேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!
தேங்காய் விலை சரிவால், கொப்பரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!
Share your comments