சளி, அஜீரணம், தலைவலி எனப் பலப் பிரச்னைகளுக்கு அருமருந்தாகத் திகழும் கற்பூரவல்லியை வீட்டில் எளிமையான முறையில் வளர்க்கலாம். கற்பூரவல்லி சாறுடன் சர்க்கரை, நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். இது குழந்தைகளி ன் அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது. கற்பூரவல்லி அல்லது ஓமம் என்று அழைக்கப்படும் இந்த அற்புத செடி மிகச்சிறந்த மூலிகைப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை இந்தியா , இலகை போன்ற நாடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. மேலும், நம்முடைய வீடுகளில் பூ தொட்டியிலும் வளர்க்கப்டுகிறது.
நன்மைகள்
சிறந்த கிருமி நாசினி
கற்பூரவல்லி பொதுவாக ஒரு கிருமி நாசினியாகவும், காய்ச்சல், சளி, தலை வலிக்கு அருமருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சூட்டைத் தணிக்கும்
இதன் இலைச் சாற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சீதள இருமல் தீரும். உடல் சூட்டை தணிக்கவும், தலைவலிக்கு தீர்வு அளிக்கவும் இவை உதவுகிறது.
சளிக் கட்டுப்படும்
கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து, 2 மி.லி சாருடன் 8 மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
தசைச் சுருக்கம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவி வந்தால், வந்த நோய்கள் பறந்து போகும்.
கற்பூரவல்லி சாறுடன் சீனி, நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும். இது குழந்தைகளி அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது.
கற்பூரவல்லியை எப்படி வளர்ப்பது?
கற்பூரவல்லியை வீட்டில் வளர்ப்பது சுலபமான ஒன்றாகும். இதன் தண்டை எடுத்து ஒரு சிறிய தொட்டியில் நட்டால் அது புதர் போல வளர்ந்து வரும்.
இதன் இலைகளில் பஜ்ஜி தயார் செய்யலாம். ரசம் வைக்கலாம். மேலும், கஷாயம் செய்து பருகி வரலாம்.
கற்பூரவல்லி தேநீர்
கற்பூரவல்லி கஷாயம் தயார் செய்ய, அதன் இலைகளை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வரலாம்.
மேலும் படிக்க...
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!
Share your comments