விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியுள்ள நிலையில், குல்கைரா சாகுபடி விவசாயிகளின் லாபம் பெறுவதை உறுதி செய்வதோடு இழப்புகளைக் குறைப்பதற்கான வழியையும் வழங்குகிறது.
குல்கைரா, யுனானி வைத்தியம் உட்பட பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ தாவரம். நிலையான விவசாய வளர்ச்சிக்கான தன்மையினை கொண்டுள்ளதால் தற்போது இவற்றை சாகுபடி செய்ய விவசாயிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குல்கைரா சாகுபடியின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் தற்போதுள்ள பயிர்களுடன் அதன் இணக்கத்தன்மை ஆகும். அதாவது, இந்தப் பயிரை வளர்க்க தனி நிலம் தேவையில்லை. வழக்கமான பயிர்களுடன் குல்கைராவை ஊடுபயிர் போல் வளர்க்கலாம். இதனால் பொருட்செலவு உட்பட பல்வேறு விவசாய நடைமுறை சிக்கல்களை தீர்க்கிறது. அதனால் தான் குல்கைரா சாகுபடியினை மேற்கொள்வோருக்கு இழப்பு குறைவு என கருதப்படுகிறது.
குல்கைரா அதன் மருத்துவ குணங்களுக்காக மிகவும் தேவைப்படுகிறது. பூக்கள், இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் போன்ற குல்கைரா தாவரத்தின் பல்வேறு பாகங்கள் சந்தையில் அதிக விலைக்கு போகின்றன. உதாரணத்திற்கு ஒரு குவிண்டால் குல்கைரா ₹ 10,000 வரை விலை போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு பிகா நிலத்தில் இருந்து சுமார் ஐந்து குவிண்டால் குல்கைராவை உற்பத்தி செய்யலாம், ஒரு பிகாவிற்கு ₹ 50,000 வரை வருமானம் ஈட்டலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குல்கைரா சாகுபடி சுழற்சி நவம்பர் முதல் மே வரை நீடிக்கும். முதலீடு முதன்மையாக விதைகளைப் பெறுவதை உள்ளடக்கியது. நவம்பர் மாதத்தில் நடவு தொடங்கும் நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறுவடை நடைபெறும்.
இவை முதிர்ச்சியடையும் போது, அதன் இலைகள் மற்றும் தண்டுகள் இயற்கையாகவே உதிர்ந்து, சேகரிப்பு செயல்முறையை எளிதாக்குகிறது. இந்த அறுவடை செய்யப்பட்ட கூறுகள் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற பல்வேறு நிலைகளுக்கு மருந்துகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மதிப்புமிக்க மூலப்பொருட்களாகும்.
குல்கைரா சாகுபடியானது தற்போது குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் பரவலாக உள்ளது. சமீபத்தில், இது இந்தியாவின் உத்தரபிரதேசத்தில், குறிப்பாக கன்னோஜ் மற்றும் ஹர்டோய் போன்ற பகுதிகளில் நடவு செய்யப்பட்டு வருகிறது.
(Gulkhaira) குல்கைராக்கான சந்தை தேவை மருந்து நிறுவனங்களிடையே வலுவாக உள்ளது, மேலும் சில சமயங்களில், விற்பனையாளர்கள் அறுவடைக்கு முன்பே விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து, இந்த மருத்துவ தாவரத்தை வளர்ப்பதற்கான பொருளாதார தேவையினையும் கூட பங்கீட்டுக் கொள்கின்றன.
இதனால் விவசாயிகளின் விருப்பமாக மாறி வருகிறத் குல்கைரா சாகுபடி. இத்தாவரம் வளர்வதற்கான குறிப்பிட்ட தட்ப வெப்ப கால சூழ்நிலையால் அனைத்து பகுதியிலும் பயிரிடுவதற்கு ஏற்றாற் போல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் இந்த 3 கரைசல் பற்றி தெரியுமா?
Share your comments