நம் நாட்டில் உள்ள கனிம வளங்களிலிருந்து 20 மில்லியன் டன்னிற்கு மேலே தாவர ஊட்டச்சத்துக்களை உருவாக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாசன மற்றும் மானாவாரி பகுதிகளில் கரிம உரத் தேவையை பூர்த்தி செய்ய மண்புழு உரத் தொழில்நுட்பம் ஓர் சிறந்த தொழில்நுட்பமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் வேளாண் கழிவுகள் மற்றும் குப்பைகளை வேளாண்மைக்கு தேவையான உள்ளீட்டு பொருளாக மாற்றுகிறது. இதனால் அங்கக கழிவுகள் மற்றும் குப்பைகளிலிருந்து பல்வேறு பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன. மேலும் மாசுபாட்டையும் தடுக்க இயலும். மண்புழு வளர்ப்பிலிருந்து நமக்கு கிடைக்கும் நன்கு மட்கிய மண்புழுவின் விலக்கிய மண்ணினை பல்வேறு பயிர்கள், காய்கறிகள்,பூக்கள் மற்றும் தோட்டங்களில் உரமாக பயன்படுத்தலாம். இந்த முறையினால், மண்புழுக்கள் மேலும் அதிகரித்து, அதிகப்படியான புழுக்கள் புழு புரதமாக மாற்றப்பட்டு கோழி, மீன் ஆகியவைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெர்மிவாஷ் பயிர்களின் மீது தெளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
மூலப்பொருட்கள்
மண்புழுவை தொட்டியில் விடுவதற்கு முன் சாணம் மற்றும் வேளாண் கழிவுகளை 1:1 முதல் 1:3 என்ற விகிதத்தில் கலந்து மண்புழு உரத்தொட்டிக்கு பக்கத்தில் ஒரு தொட்டியில் இரண்டு வாரங்களுக்கு விட வேண்டும்.
செயல்முறை
* சிறிய அளவில் உரம் உற்பத்தி செய்வதற்கு தேவையான தொட்டியின் அளவு - 10’ x 6’ x 2.5’ (150 கன அடி)
* அதிகமான நீரை வடிக்க போதுமானளவு துளைகளை உருவாக்க வேண்டும் (5 செ.மீ குறுக்களவில் 8 துளைகள் இருக்க வேண்டும்)
* மண்புழு படுக்கை கற்கள், மரத்தூள், மணல் மற்றும் பல வகை மண்களை கொண்டவை. மண்புழுவை படுக்கையில் விடவும்.
* உணவுக் கலவையை 15- 20 செ.மீ அடர்த்தியில் மண்புழு படுக்கையின் மீது சேர்க்கவும்
* பாதி சிதைவுற்ற கழிவுகளை 1.5 -2 அடி ஆழத்தில் அடுக்குகளாக இட வேண்டும்.
* ஈரப்பதத்தை (40%) பராமரிக்க தொட்டியை ஓலைக் கூரை கொண்டு மூட வேண்டும்.
உகந்த ஈரப்பதம் காரணமாக மண்புழுக்கள் தொட்டியின் கீழ் நோக்கி நகரும். ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் கரிமப்பொருள் உகந்த நிலையில் இருக்கும் போது, மண்புழுவின் அளவு, எடை மற்றும் கூடு உற்பத்தி திறன் அதிகரிக்கும்.
நிலைமாற்றம்: ஒரு வாரத்தில் ஒரு கிலோ மண்புழு (600-1000) 25-45 கிலோ ஈரக் கழிவுகளை மட்கு எருவாக மாற்றுகிறது. சராசரியாக ஒரு வாரத்தில் 25 கிலோ மட்கும் குப்பை நன்கு பராமரிக்கப்படுகின்ற மையத்தில் கிடைக்கும்.
அறுவடை
பல்வேறு காரணிகளை பொறுத்து பொதுவாக கழிவுகள் சிதைவுறுவதற்கு 75 -100 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இதனால் மண்புழு உரம் தயாரிக்க ஒரு தொட்டியை ஒரு வருடத்திற்கு 4- 5 முறை பயன்படுத்தலாம். மண்புழுக்கள் தொட்டியின் கீழ் நோக்கி செல்வதற்காக அறுவடைக்கு சில நாட்களுக்கு முன்பே தண்ணீர் விடுவதை நிறுத்த வேண்டும். மட்கிய உரத்தை 3 மி.மீ வலைக்கண் சல்லடை கொண்டு சலித்து, கோணிப்பைகளில் அடைக்க வேண்டும். ஒவ்வொரு சுழற்சியிலும் குறைந்தபட்சம் 1700 கிலோ மக்கிய உரம் தயாரிக்கலாம். குஞ்சு பொரிக்காத முட்டைகளையும், மண்புழுக்களையும் சேகரித்து அதனை புது தொட்டியில் குப்பைகளை மட்குவதற்கு பயன்படுத்தலாம். அதனை வெயிலில் உலர்த்தி ‘வெர்மி-புரொடீன்’ தயாரிக்கலாம்.
மண்புழுக்கள் மூலம் கழிவு மேலாண்மை
* திட கழிவு பொருட்களை மண் அல்லது புல்லின் மீது பரப்பி விடவும். இந்த கழிவு பொருட்கள் மண்ணுடன் நேரடியாக சிதையுறுவதற்கு மண்புழு முக்கிய பங்கு வகிக்கிறது.
* கழிவுகளை மட்கு எரு போல ஒரு குவியலாகவோ அல்லது ஒரு தொட்டியிலோ வைக்க வேண்டும். இதனால் மண்புழுவின் செயல்திறன் அதிகரித்து மண்புழுவின் வார்ப்புகளை அதிகமாக உற்பத்தி செய்கின்றன. இந்த மண்புழு வார்ப்புகளை உரமாக விற்பனை செய்கின்றனர்.
இதில் இரண்டாவது முறை எளிதானது மற்றும் நம் நாட்டில் பரவலாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments