1. தோட்டக்கலை

உருளைக் கருவி மூலம் நெல் விதைப்பு-அலங்காநல்லூரில் குறுவை சாகுபடிப் பணிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Paddy sowing with roller tool - Cultivation of curry in Alankanallur!
Credit : Vivasayam

மதுரை மாவட்டத்தில், நெல் சாகுபடியை உருளை விதைப்பு முறையில் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறுவை சாகுபடி (Cultivation of curry)

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி மும்முரமாக நடவு செய்யப்பட்டு வருகிறது. இதில் நெல் சாகுபடி உருளை விதைப்பு முறையில் (Drum seedling) விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உருளை விதைப்பு (Cylinder seeding)

தற்போது செம்புகுடிபட்டி உழவர் ஆர்வலர் குழு மூலம் அந்த உறுப்பினர்கள் 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த முறையில் நெல் சாகுபடி உருளை விதைப்பு செய்ததை வேளாண்மை கூடுதல் இயக்குனர் சங்கர லிங்கம் தொடங்கி வைத்து கூட்டுப்பண்ணைய திட்டத்தின் நடைமுறை மற்றும் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

அதிகாரிகள் பங்கேற்பு (Involvement of officials)

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமுதன், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) சுப்புராஜ்,வேளாண்மை உதவி இயக்குனர் வாசுகி, உழவர் ஆர்வலர் குழு தலைவர் நாகராஜ் மற்றும் குழு உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நேரடி நெல் விதைப்பு (Direct sowing of paddy)

நேரடியாக நெல் விதைப்பு செய்வது இம்முறையின் சிறப்பம்சமாகும். இம்முறையில் இக்கருவி எடை குறைவாக இருப்பதால் கொண்டு செல்வதற்கும், பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது.

ஏக்கருக்கு 8 கிலோ விதை (8 kg seed per acre)

எளிதாக கையால் இயக்கப்படுகிறது. இம்முறையில் ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ விதை என்ற அளவில் விதைப்பு செய்து வருகிறார்கள். இதனால் நெல் விதை மிகக் குறைந்த அளவில் பயன் படுத்தப்படுகிறது. குறைந்த செலவில், குறைந்த வேலை யாட்கள் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தை ஒன்றரை மணி நேரத்தில்விதைப்பு செய்யலாம்.
இந்தக் கருவியைப் பயன்படுத்துதன் மூலம் மூலம் 40 சதவீத விதைகளை மிச்சப் படுத்தலாம். பயிர்களுக்கு இடையே இடைவெளி பராமரிக்கப் படுகிறது.

சீரான விகிதத்தில் சத்துக்கள் (Nutrients in a balanced ratio)

இதனால் களையெடுத்தல், உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் ஆகிய பணிகள் செய்ய ஏதுவாக இருக்கிறது. பயிர் போட்டியை குறைப்பதோடு மட்டுமின்றி பயிர்களுக்குச் சீரான விகிதத்தில் சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது.

அதிக மகசூல் (High yield)

இம்முறையால் குறைந்த வேலை யாட்கள் தேவை மற்றும் பயிர்கள் 7 முதல் 10 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு தயாராகி நடவு பயிரைக் காட்டிலும் அதிக மகசூல் தருகிறது.

செயல்விளக்கம் (Process)

இந்நிகழ்ச்சியை உதவி வேளாண்மை அலுவலர் பால்பாண்டி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கூடுதலாக விவசாயிகளுக்கு வரப்பில் பயறு வகை பயிர்கள் சாகுபடி குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் படிக்க...

தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

English Summary: Paddy sowing with roller tool - Cultivation of curry in Alankanallur! Published on: 23 June 2021, 07:06 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.