அரும்பாடுபட்டு விளர்க்கும் பயிர்களைத் தாக்கிப் பதம்பார்க்கும் பூச்சிகளை, இயற்கையான சில இலைகளைப் பயன்படுத்திப் பூச்சிக்கொல்லிகளைத் தயாரித்து விரட்டலாம்.
தாவரப் பூச்சிக்கொல்லிகள் (Plant Insecticide)
அத்தகையப் பூச்சிக்கொல்லிகள், தாவரப் பூச்சிக் கொல்லிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவ்வாறு கிராமங்களில் கிடைக்கும் சில தாவரங்களைப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.
அவை
ஆடாதோடை
நொச்சி
எருக்கு
வேம்பு
சோற்றுக் கற்றாழை.
எட்டிக் கொட்டை
மேலே சொன்னவற்றின் இலைகளைச் சேகரித்து, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தாவரப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கலாம்.
ஊறல் முறை(Soak Method)
தேவையான பொருட்கள்
நொச்சி
ஆடாதோடை,
வேம்பு
எருக்கன்
பிச்சங்கு (உண்ணி முள்),
போன்றவற்றின் இலைகள் 2 கிலோ எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் கோமியம், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாட்கள் வரை உறவு வேண்டும்.இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இந்தக் கரைசலில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
வேக வைக்கும் முறை (Boiling Method)
இந்த தாவரங்களின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2-லோ எடுத்து பாத்திரத்தில் போட்டு அத்துடன் 15 லிட்டர் நீர் ஊற்றி, 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். இலைகள் நன்கு வெந்தபிறகு சாற்றை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆறியபின் அதில் ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வடிச்சாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்துச் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
மேலும் படிக்க...
அங்ககச் சான்று பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்!
Share your comments