ஆபத்தான சமிக்ஞைகளை தாவரங்கள் பரிமாறிக் கொள்ளுவதை ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளனர் ஜப்பானிய விஞ்ஞானிகள். ஒரு புதிய ஆய்வு ஒன்றில், ஜப்பானிய விஞ்ஞானிகள் தாவரங்கள் தொடர்பு பரிமாறிக்கொள்ளும் மறைக்கப்பட்ட உலகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
சேதமடையாத தாவரங்கள் பாதிக்கப்பட்ட பக்கத்து தாவரங்களிடமிருந்து வரும் ஆபத்து சமிக்ஞைகளுக்கு பதிலளிக்கின்றன என்பது இந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இதுத்தொடர்பான வீடியோ ஆதாரமும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தாவரங்கள் குறித்தான ஆய்வுக்கு இது பெரிதும் உதவும் என இயற்கை விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சைதாமா பல்கலைக்கழகத்தைச் (Saitama University) சேர்ந்த ஜப்பானிய விஞ்ஞானிகள், தாவரங்கள் எவ்வாறு ஆபத்து சமிக்ஞைகளைத் தொடர்பு கொள்கின்றன என்ற மர்மத்தை தனது ஆய்வு முடிவில் அவிழ்த்துள்ளனர். 1980- ஆம் ஆண்டுகளில் இருந்து, விஞ்ஞானிகள் தாவரங்களுக்குள் அச்சுறுத்தல்கள் பற்றி தகவல் பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்று அறிந்திருந்தனர். ஆனால் அதனை நிரூபிக்க துல்லியமான நடவடிக்கைகள் எதுமில்லாமல் இருந்தது.
இந்நிலையில் தான் நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மூலக்கூறு உயிரியலாளர்களான யூரி அராடனி மற்றும் டகுயா உமுரா ஆகியோர் ஆபத்தை கண்டறியும் போது தாவரங்களுக்கிடையிலான சிக்கலான தொடர்பு நெட்வொர்க்கை வெளிக்கொண்டு வந்து நிரூபித்துள்ளனர்.
கண்டறிந்தது எப்படி?
தாவரங்களுக்கு இடையேயான தொடர்பை ஆராய்வதற்காக, விஞ்ஞானிகள் தக்காளி செடிகளின் இலைகளில் கம்பளிப்பூச்சிகளையும், பொதுவான களையான அரபிடோப்சிஸ் தலியானாவையும் பயன்படுத்தி சோதனைகளை நடத்தினர். அரபிடோப்சிஸ் களையில் ஒரு பிரத்யேகமான பயோசென்சார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இது கால்சியம் அயனிகளின் வருகையைக் கண்டறிந்ததும் பச்சை நிறத்தில் ஒளிரும். ஆராய்ச்சியாளர்கள் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் சேர்மங்களை குவித்து, அவற்றின் மீதான தாக்குதலின் மூலம் இதனை கண்டறிந்துள்ளனர்.
சேதமடையாத தாவரங்களின் பதில்:
சேதமடையாத தாவரங்கள் பாதிப்படைந்த அண்டை தாவரங்களின் செய்திகளுக்கு தெளிவாக பதிலளித்தன. தாவரங்களின் நீட்டிக்கப்பட்ட இலைகள் முழுவதும் கால்சியம் சிக்னலைக் காட்டுகின்றன. Z-3-HAL மற்றும் E-2-HAL கலவைகள் காற்றில் பரவும் சேர்மங்கள் மூலம் அரபிடோப்சிஸில் கால்சியம் சிக்னல்களைத் தூண்டுவது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு செல்கள், (guard cells), மீசோபில் செல்கள் (mesophyll cells) மற்றும் எபிடர்மல் செல்கள் (epidermal cells) ஆகியவை ஆபத்துகள் குறித்து பதிலளிப்பவர்களாக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
செல்களின் பதில்கள்:
ஃப்ளோரசன்ட் சென்சார்கள் கொண்ட அரபிடோப்சிஸ் தாவரங்களைப் பயன்படுத்தியதில், Z-3-HAL வெளிப்படும் போது, பாதுகாப்பு செல்கள் உடனடியாக கால்சியம் சிக்னல்களை உருவாக்குவதை குழு கவனித்தது. அதைத் தொடர்ந்து மீசோபில் செல்கள் எச்சரிகையை தூண்டுகிறது. குறிப்பிடத்தக்க வகையில் தகவல்தொடர்பு நெட்வொர்க்கில் ஸ்டோமாட்டா தாவரத்தின் 'நாசியாக' செயல்படுவதை அறிய முடிந்தது.
ஆய்வின் மூத்த விஞ்ஞானியான மசாட்சுகு டொயோட்டா, எச்சரிக்கை செய்திகளுக்கு தாவரங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்ற சிக்கலான முடிவுகளை கண்டறிந்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Read also:
மொட்டை மாடி தோட்டம்: முருங்கை- பப்பாளி மரம் பராமரிக்க சூப்பர் டிப்ஸ்
பூசணித் தோலினை வீட்டுத் தோட்டத்துக்கு இப்படியும் பயன்படுத்தலாமா?
Share your comments