உயர் தொழில்நுட்பம் முறையில் மலர்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ய பசுமைக்குடில்கள் பயன்படுகின்றன. மேலும் காற்று, மழை, அதிக வெப்பநிலை, பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து பயிர்களுக்கு சாதகமான சுழலை உருவாக்கி கூடுதல் மகசூல் பெறவும் உதவுகிறது.
விளைப் பொருட்களின் தரத்தினை உயர்த்தவும் உதவுகின்றது, அதிக வருவாய் அளிக்கக்கூடிய தோட்டக்கலை பயிர்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானமும் விளைப்பொருட்களின் சந்தை வாய்ப்பும் கூடுகிறது. எனவே, இத்தகைய தொழிலநுட்பங்களை விவசாயிகளிடையே அதிக அளவில் கொண்டு சேர்க்க பல்வேறு தோட்டக்கலை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பசுமைக்குடில் அமைத்திட 50 சதவீத பின்னேற்பு மானியமாக, சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.467.50/- தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற கீழ்காணும் இணையதளத்தில் பதிவு செய்யவும்,
www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php
வெள்ளரி, குடை மிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் (Polygreen House)/ நிழல்வலைக்குடில் (Shadenet) அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இதர விவசாயிகளுக்கும் 50 சதவித மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவித மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தோட்டக்கலைத்துறையில் 40% முதல் 60% மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் குறித்த தகவல்களை கீழ்க்காணும் இணையத்தளத்தில் அறியலாம் www.tnhorticulture.tn.gov.in/.
மேலும் படிக்க: Good News: விரைவில் வங்கி ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும்!
பசுமைக்குடில் கட்டுமானத்திற்கான தளத் தேர்வு மிக முக்கியம் (Site selection for green house construction is very important):
- ஒருவருக்கு குறைந்தபட்சம் 1000 சதுர மீட்டர், வணிக ரீதியாக சாத்தியமான பாலி ஹவுஸை உயர்த்துவதற்கான பகுதி. தரமான நீரின் தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைப்பது அவசியம்.
- கட்டுமானத் தளம் சுற்றியுள்ள நிலத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட தளம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும்.
- பசுமைக்குடில் விளைபொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு நல்ல சாலைகளின் வசதி இருக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் (Important points to be noted):
- பசுமைக்குடில் விவசாயத்தின் பயிர் சார்ந்த ‘திட்ட அறிக்கையை’ ஒருவர் தயாரிக்க வேண்டும். இந்த அறிக்கை திட்டத்தின் அனைத்து தொழில்நுட்ப, நிதி மற்றும் சந்தைப்படுத்தல் அம்சங்களையும் உள்ளடக்க வேண்டும்.
- விவசாயத் துறை, விவசாய வங்கிகள் மற்றும் நபார்ட் போன்ற நிதி நிறுவனங்களிலிருந்து மாதிரி வங்கி திட்டங்களை நீங்கள் குறிப்பிடலாம்.
- வங்கி கடன்கள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆவணப்படுத்த திட்ட அறிக்கை அவசியம்.
- திட்டத்துடன் முன்னேறுவதற்கு முன் ஒரு முழுமையான தொழில்நுட்ப அறிவு, நிதி பகுப்பாய்வு மற்றும் சந்தைப்படுத்தல் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.
மேலும் படிக்க:
Coco Peat: தென்னை நாரை முறையாக பயன்படுத்தி, லாபம் ஈட்டலாம் தெரியுமா?
Share your comments