குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள், வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்படுவதால், அவற்றை வாங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
135 நாட்களுக்குப் பாசனவசதி (Irrigation for 135 days)
அமராவதி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 4,500 ஏக்கர் விளைநிலங்கள் எதிர்வரும், 135 நாட்களுக்குப் பாசன வசதி பெறும்.
குறுகியக் காலப் பயிர்கள் (Short-term crops)
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்கள் மற்றும் உளுந்துப் பயிர்களை சாகுபடி செய்யுமாறுக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தடையின்றி விநியோகம் (Unrestricted distribution)
ஊரடங்கு அமலில் இருந்தாலும், விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருட்கள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் உரக்கடைகளில் தடையின்றி வினியோகம் செய்யப்படுகிறது.
மானிய விலையில் (At subsidized prices)
விவசாயி களுக்கு மானிய விலையில் விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் உள்ளிட்டவை வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்புக்கு (Contact)
விவசாயிகள் நேரடியாக அலுவலகத்தை அணுகியோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் வாயிலாகவோ தேவையான இடுபொருட்களை மானிய விலையில் பெற்றுப் பயன் பெற வேண்டும்.
தகவல்
ராஜேஸ்வரி
உதவி இயக்குனர்
மடத்துக்குளம் வேளாண்மை துறை
திருப்பூர் மாவட்டம்
மேலும் படிக்க...
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!
Share your comments