வாழைக் கழிவுகளில் இருந்து சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநரும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் துணைத் தெரிவித்தார் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை யோசனைத் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தானது (The contract signed)
திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணாதுரைக் கலந்துகொண்டார். இதில் வாழைக் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மயில்சாமி அண்ணாதுரை கையெழுத்திட்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், வாழை அறுவடைக்குப் பிறகு 80 மில்லியன் டன் கழிவுப்பொருள் வீணாகிறது. இந்தியாவில் மிகப்பெரிய தொழில்துறைத் திறன் இருந்தும் இந்தக் கழிவுகளை முறையாக பயன் படுத்துவதில்லை.
விமானப் பாகங்கள் (Aircraft parts)
வாழை நாரைப் பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு ஒலி பேனல்கள் மற்றும் விமானப் பாகங்களைத் தயாரிக்கலாம்.
சிறந்த ஊட்டச்சத்து (Excellent nutrition)
பழங்கள், காய்கனிகளின் விளைச்சலை அதிகரிக்கவும், கார்பன் அளவைக் குறைக்கவும் வாழைப் பட்டையின் சாறு சிறந்த ஊட்டச்சத்தாக அமையும். தமிழகத்தில் ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் சாகுபடியாகும் வாழையில் தார் அறுவடைக்குப் பிறகு 10 மில்லியன் டன் கழிவுகள் கிடைக்கின்றன.
இந்த அங்கக் கழிவகளை நிர்வக்கக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்திருப்பது பெருமைக்குரியது.வாழைக் கழிவுகளை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 3 டன்களுக்கும் மேலாக வாழை நாரை பிரித்தெடுக்க முடியும்.
சுழற்சிப் பொருளாதாரம் (Rotational economy)
இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களை உருவாக்கலாம். வாழை நார், வாழைப் பட்டை சாறு, வாழைப் பட்டை கழிவு, வாழைத் தண்டு எனப் பிரித்தெடுத்து, சுழற்சியான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.உமா பேசுகையில், வாழைக் கழிவுகளை நிர்வகிக்கும் திட்டத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன், ஐஐஐடி- காஞ்சிபுரம், மும்பை ஜென்கிரஸ்ட் தொழிற்சாலை ஆகியவை இணைந்து பணியாற்ற உள்ளன. இதற்கான ஒத்துழைப்பை மயில்சாமி அண்ணாதுரை வழங்குகிறார் என தெரிவித்தார்.
மேலும் படிக்க...
விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!
அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை-கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
Share your comments