கடலூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
விவசாயிகள் கோரிக்கை (Farmers Demand)
மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை நிா்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதன் அடிப்படையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெல்ட் வகை இயந்திரங்கள் (Belt type machines)
இதன்படி, பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத்தன்மையின் அடிப்படையில் மணிக்கு வாடகையாக ரூ.1,800 முதல் ரூ.2,100 வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டயா் வகை இயந்திரங்கள் (Tyre type machines)
டயா் வகை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத் தன்மையின் அடிப்படையில் மணிக்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையிலும் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியாா் இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிப்பது குறித்து விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மைத் துறை அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயித்ததைவிட அதிக வாடகை வசூலிப்பதாக புகார் வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மீன் சாப்பிட ஆசையா? நோய்களுக்கு இரையாகப்போறீங்க உஷார்!
சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
Share your comments