காளான் உற்பத்திக் கூடம் அமைத்து வருமானம் ஈட்ட விரும்பும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தின் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டு பெண் விவசாயிகள் சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம் அமைக்கலாம். இதற்கு மொத்த செலவினம் ரூ.2லட்சம் ஆகும்.மொத்த செலவில், 50 சதவீதம் அதாவது ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.இந்தத் திட்டம் பெண் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறு பெண் விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறோம். எனவே விருப்பம் உள்ளப் பெண் விவசாயிகள் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வக்குமாரை (9677776214,9790526223) ஆகிய செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments