ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கூறினார்.
தண்ணீர் குழாய்கள்
தாட்கோ மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அவர்கள், தங்கள் நில மேம்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் பி.வி.சி. தண்ணீர் குழாய்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
தகுதி
விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் இருக்க வேண்டும். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம்
-
தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
ஏற்கனவே, தாட்கோ திட்டத்தில், நிலம் வாங்குதல், மேம்படுத்தும் திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் போன்றவற்றில் பயன் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி
விண்ணப்பதாரர் சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்பஅட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, புகைப்படம், பட்டா, சிட்டா, அடங்கல், ‘அ' பதிவேடு, புலப்பட வரைபடம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றுடன், ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ இணையதளமான "http://application.tahdco.com/"http://application.tahdco.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003 என்ற அலுவலக முகவரியில் நேரில் சென்று விவரம் அறியலாம். 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!
Share your comments