விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மின் மோட்டாருக்கான பைப் லைன் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படுவதால், பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் மின் மோட்டார் மற்றும் பைப் லைன் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாயும், பைப் லைன் அமைக்க 15 ஆயிரம் ரூபாயும் அரசு மானியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த மானியத் தொகையைப் பெற http:/application tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
சிறு,குறு விவசாயி சான்றிதழ்
-
அடங்கல்
-
கிணறு அமைந்துள்ள நிலவரை படம்
-
மின்சார இணைப்பு அட்டைவிபரம்
-
வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல்
மேலேக் கூறப்பட்ட ஆவணங்களுடன் விவசாயிகள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறை (Selection procedure )
இவ்வாறு ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட தேர்வு குழுவினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்தகுழுவினரால், தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!
கிசான் கால்சேன்டர், விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க! முயற்சி
Share your comments