வாழை மரத்திலிருந்து கீழே விழுந்தத் தொழிலாளி ஒருவருக்கு ரூ.4கோடி இழப்பீடாக வழங்கப்பட்டிருப்பது மற்றவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாழைத் தோப்பில் தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். பணிநிமித்தமாக ஒரு தொழிலாளி வாழை மரத்தில் ஏறிக் காய்கப் பறித்துக்கொண்டிருந்தார்.
எதிர்பாராத விபத்து (Unexpected accident)
அப்போது, எதிர்பாராத விதமாக வாழை மரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அந்தத் தொழிலாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும், இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வேறு எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு (After 5 years)
இதன்கரணமாக, அந்தத் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரி ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், வாழை மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி ரூபாய் 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.
ரூ.4 கோடி (Rs 4 crore)
இந்த தீர்ப்பை அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டு அந்த தொழிலாளிக்கு 4 கோடி இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. உண்மையிலேயே நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க...
தரிசு நில மேம்பாட்டு மானியத் திட்டம்-ஹெக்டேருக்கு ரூ.13,000!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!
Share your comments