திருநெல்வேலியில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் எஸ்.என். திலீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை, இதர பழ மரங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
நீர் மேலாண்மைத் திட்டம் (Water Management Scheme)
இந்த பயிர்களுக்கு நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், துணை நீர் மேலாண்மைச் செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.
அதாவது பாசன குழாய்களை நிறுவுதல் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நீர் மேலாண்மை பணிகளுக்காகவும் அரசு மானியம் வழங்கி வருகிறது
எனவே பயன்பெற விரும்பும் விவயாகிள், நுண்ணீர் பாசன திட்டத்துக்காக இணையத்தில் பதிவு செய்யும் போது, இத்திட்டத்திற்காகவும் பதிவு செய்ய வேண்டும்.
50% மானியம் (50% Subsidy)
மேற்கண்ட பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசன முறையினை பின்பற்ற முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
-
குழாய் கிணறு, துணை கிணறு அமைக்க 50 சதவீத மானியம், அதாவது 25 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.
-
ஆயில் மோட்டார். மின்மோட்டார் நிறுவுவதற்கு 50 சதவீத மானியம் ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.
-
பாசன குழாய்கள் அமைக்க பயனாளிக்கு அதிகபட்சம் ஒரு ஹெக்டேருக்கு ஐம்பது சதவீத மானியம்கும் 10ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கப்படும்.
-
தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 50 சதவீத மானியம் அதாவது 1 கன மீட்டருக்கு ரூ.350 வீதம் அதிகபட்சமாக ரூ.40,000 வரை வழங்கப்படும்.
-
மேலும் நுண்ணீர் பாசனம் அமைத்திட தற்போது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
-
நிலத்தில் பட்டா
-
சாகுபடி செய்யும் பயிர் பரப்பின் சர்வே எண்கள்
-
அடங்கல்
-
வயல் வரைபட நகல்
-
குடும்ப அட்டை
-
ஆதார் அட்டை
-
வங்கிக் கணக்கு புத்தகம்
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
ஆகியவற்றுடன் அருகில் உள்ள தோட்டக்கலைத்துறைற உதவி இயக்குநர் அலுலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
Share your comments