விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விற்பனை செய்வதற்காக விதைகள் தயார் நிலையில் இருப்பதாக புதிய வேளாண் இணை இயக்குனராகப் பொறுப்பேற்றுள்ள கோ.ரமணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி வந்த ராஜசேகர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி வந்த கோ.ரமணன், விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட கோ. ரமணன், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம். இங்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. இம்மாவட்டத்தில் நெல், கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு போதுமான அளவு விதைகள் இருப்பு வைத்து தட்டுப்பாடின்றி வழங்கப்படும்.
அதுபோல் கரும்புக்குச் சொட்டுநீர் பாசனம் அமைக்கவும் மானியம் வழங்கப்படும். தற்போது கரும்பு சாகுபடி 10 ஆயிரம் ஹெக்டேர் அளவில்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகரிக்கத் தேவையான ஏற்பாடு செய்யப்படும்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழும், விதை கிராம திட்டத்தின் கீழும் நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 20 கிலோ வரை விதைகள் வழங்கப்படும்.
எந்தவித குறைபாடும் இன்றி இருப்பு வைத்து போதுமான அளவில் நெல் விதைகள் வழங்கப்படும். இவ்வாறு கோ. ரமணன் கூறினார்.
மேலும் படிக்க...
வறுமையை ஒழித்துக் கிராமங்களை வளமாக்கும் MGNREGA!!
ரபி பருவப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு!
மத்திய அரசு வழங்கும் சூரிய மித்ரா பயிற்சி-தங்குமிடம், உணவு இலவசம்!
Share your comments