தமிழகம் முழுவதும் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில், ஐந்து லட்சம் காய்கறி நாற்றுக்கள் மற்றும் பூச்செடிகள் விற்பனை துவங்கியுள்ளது.
தோட்டக்கலைத் துறைக்கு, மாநிலம் முழுதும் பண்ணைகள் உள்ளன. இங்கு தரமான காய்கறி நாற்றுக்கள், பூச்செடிகள், பழ மரக்கன்றுகள், பூ மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை விவசாயிகள் மட்டுமின்றி, பொது மக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மழைக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தோட்டக்கலை பண்ணைகளில், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரை உள்ளிட்ட, காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மல்லிகை, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூச்செடிகளும், மா, பலா, கொய்யா உள்ளிட்ட பழ மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
5 லட்சம் இலக்கு (5 Lakh Target)
மொத்தமாக, 5 லட்சம் நாற்றுகள் மற்றும் பூச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் பண்ணைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
சென்னை, மாதவரம் தோட்டக்கலை பண்ணையிலும் விற்பனை நடைபெற்று வருகிறது.
மானிய விலையில் விற்பனை (Sale at subsidized prices)
வீட்டு தோட்டம் அமைப்பதற்காக, தென்னை நார் கழிவு, விதைகள், செடி வளர்ப்பு பைகளும் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தும்படி, தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க...
சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
கோடை உழவின் அவசியம் மற்றும் பயன்கள்!
10 மரக்கன்றுகளை நட்டால், புதிய பைக் வாங்க 25,000 தள்ளுபடி! அதிரடி சலுகை!
Share your comments