1. தோட்டக்கலை

முளைப்பு திறனை மேம்படுத்துவதற்கான யுக்திகள்: விதை நேர்த்தியின் பயன்கள் மற்றும் அதன் வகைகள்

KJ Staff
KJ Staff

விதை நேர்த்தி என்பது, விதைகளை தாக்கும் பூச்சிகளில் இருந்து   பாதுகாப்பதாகும்சேமிப்பு விதைகளை பாதுகாக்க பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றை தனித்தோ அல்லது  ஒருங்கிணைத்து விதைகளின் மேல் இடுவதன் மூலம் மண் மூலமாக பரவும் நோய்கள் கட்டுப்படுத்துவதாகும்.

விதை நேர்த்தியின் பயன்கள்

பயிர்களில் நோய் பரவாமல் தடுகிறது.

விதை அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து காக்கிறது.

முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது.

சேமிப்பில் தாக்கும் பூச்சிகளில் இருந்து பாதுகாக்கிறது.

மண்ணில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

விதை நேர்த்தி வகைகள்

விதைக் கிருமிகளை நீக்குதல்

இம்முறையானது விதையுறையினுள் அல்லது விதைகளின் திசுக்களின் ஆழப் பரவி இருக்கும் பூஞ்சாண வித்துக்களை நீக்குதல் ஆகும். திறனுள்ள முறையில் பூஞ்சான் தொற்றுதலை நீக்குவதற்கு பூஞ்சாணக்கொல்லி விதையினுள் ஊடுருவிச் செல்லவேண்டும்.

விதைக் கிருமிகளை அழித்தல்:

விதையின் உட்புறத்தை தாக்காமல், விதையின் மேற்புறத்தில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதே இம்முறை ஆகும். இரசாயனக் கலவையில் விதைகளை பதப்படுத்தியும்,  நனைத்தும், பூஞ்சாணக் கொல்லி பொடிகள் மற்றும் திரவங்கள் ஆகியன சிறந்த முறையில் பலன் அளிக்கும். 

விதைகளைக் காத்தல்:

சிறந்த முளைப்பிற்காக இளம் விதைகளை மண் மூலமாக பரவும் கிருமிகளில் இருந்து ஆரம்ப கட்டத்திலேயே பாதுகாப்பது விதை காத்தலின் நோக்கமாகும்.

English Summary: seed technology: seed treatment: benefits and types of seed treatments Published on: 16 May 2019, 06:07 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.