Credit : Plant cell Technology
பயிர் வளர்ச்சி ஊக்கள் ஏழு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஆக்சின், சைட்டோகைனின், ஜிப்ரலின், அப்சிசிக் அமிலம், பாலிஅமைன்கள், ஆன்டிக்மைட்டாடிக் மற்றும் ஆன்ட்டிஜிபர்லின் ஆகியவை ஆகும். அவற்றின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆக்சின் (Axin)
தாவரங்களில் வேர் மற்றும் தண்டு வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், செல் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
சைட்டோகைனின் (Cytokine)
ஆக்சினை போன்றே இந்த வகை ரசாயனங்களும் தண்டு மற்றும் வேர் தூண்டுவதற்கு பயன்படுகிறன்றன.
ஜிப்ரலின் (Gibralin)
இவை விதைகளில் காணப்படும் மந்தத்தன்மையை உறக்க நிலையிலேயே உடைத்து, நன்றாக முளைக்கும் திறனை விதைக்கு ஏற்படுத்துகின்றது.
அப்சிசிக் அமிலம் (Aphthous acid)
பூண்டு மற்றும் வெங்காயத்தில் குமிழ் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு மட்டுமல்லாமல், கிழங்குகளின் வளர்ச்சியைத் துண்டுவதற்கும் இவை பயன்படுகிறது.
பாலிகமைன்கள் (Polygamines)
இவை வேர் மற்றும் தண்டின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு வித்திடுவது மட்டுமல்லாமல் விதைகளின் கரு வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் பயன்படுகின்றன.
ஆன்ட்டிமைட்டாடிக் (Antimycotic)
இவைகள் குமிழ் மற்றும் தண்டின் வளர்ச்சியைத் தூண்ட பயன்படுத்தப்படுகிறது.
ஆன்ட்டிஜிபர்லின் (Antigiberlin)
இவை ஜிப்ரலின்க்கு எதிர்ப்பாக செயல்படும் ரசாயனம் ஆகும். குமிழ் மற்றும் கிழங்கு வளர்ச்சியைத் தூண்டி வலுப்படுத்துகின்றது.
மேலும் விபரங்களுக்கு
சக்திவேல்,
இளங்கலை வேளாண் மாணவன்
மின்னஞ்சல் - duraisakthivel999 egmail.com
ச.பாலமுருகன்,
உதவிப் பேராசிரியர் (பூச்சியியல் துறை),
மின்னஞ்சல் :[email protected],
முனைவர் பா. குணா: உதவிப் பேராசிரியர்,
வேளாண் விரிவாக்கத்துறை வேளாண்புலம்.
மின்னஞ்சல்: [email protected]
பிரிஸ்ட் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் என்ற முகவரியைத்தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்- விவசாயிகளுக்கு அழைப்பு!
உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க புதிய செயலி அறிமுகம்!
Share your comments