1. தோட்டக்கலை

பணம் தங்குதடையின்றி வரவேண்டுமா? இந்தச் செய்தால் போதும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Should Money Come Free? Just do this!

இந்தச் செடி வீட்டில் இருந்தால், மகாலட்சுமி மகிழ்ச்சியடைவார். பண வரவு தடையின்றி இருக்கும். சில தாவரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் அதிசயமான தாவரங்களாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இந்த தாவரங்கள் வீட்டின் எதிர்மறை ஆற்றலை அழிப்பதோடு பண வரவை அதிகரிக்கும்.

மேலும், இந்த தாவரங்களின் விளைவாக தடைபட்ட காரியங்களும் நடக்கும். இப்படிப்பட்ட தாவரங்களின் ஒன்றுதான் பூவரசம் பூ. இதை வீட்டில் வளர்த்தால் பணத்தட்டுப்பாடே இருக்காது. இதற்கு 5 காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

முதல் காரணம்

பூவரசம் பூவின் வழிபாட்டால் விஷ்ணு மகிழ்ச்சி அடைகிறார். அதே நேரத்தில், செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியும் மகிழ்ச்சியடைந்து உங்களை செல்வந்தராக மாற்றுவார். இதை வீட்டில் நடுவதற்கு பதிலாக, வெளியில் நடுவது நல்லது.

2-வது காரணம்

பல முயற்சிகளுக்குப் பிறகும் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிட்டால், பூவரசம் பூவின் 108 இலைகளில் விஷ்ணுவின் பெயரை எழுதி புண்ணிய நதியில் ஓடச் செய்யுங்கள். இதனால் பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு ஏற்படும்.

3-வது காரணம்

கண் திருஷ்டி காரணமாக குடும்ப நபர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், பூவரசம் மரத்தின் 11 இலைகளில் ஓம் ஹனுமத்யே நம என்று எழுதி, ஓடும் நீரில் வீசவும். இவ்வாறு செய்வதால் கண் தோஷம் தீரும்.

4-வது காரணம்

திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது தகுந்த வாழ்க்கைத் துணையை நீங்கள் தேடிக்கொண்டிருந்தாலோ, அரச மர வேரில் தினமும் தண்ணீர் ஊற்றுங்கள். இவ்வாறு செய்தால் திருமண பிரச்சனை தீரும்.

5-வது காரணம்

ஒருவரது ஜாதகத்தில் குருவின் ஸ்தானத்தை வலுப்படுத்த பூவரசம்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாழக்கிழமையில், குரு பகவானுக்கு பூவரசம்பூவால் அர்ச்சனை செய்வது நல்ல பலன்களைத் தரும்.

மேலும் படிக்க...

மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் நீட்டிப்பு- SBI அறிவிப்பு!

மனைவியைக் கொன்றுக் கூறுபோட்டு சமைத்துத் தின்றக் கணவன்!

English Summary: Should Money Come Free? Just do this! Published on: 19 February 2022, 09:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.