இன்றைய கொரோனா காலகட்டத்தில் வைரஸ் எதன் மூலம் நமக்கு பரவுமோ? என்று அனைவருக்கும் அச்சம் (Covid-fear). அதனால், நகர மற்றும் கிராமவாசிகள் பலரும் தங்களது வீட்டிலோஅல்லது மொட்டை மாடியிலோத் தோட்டத்தை அமைத்து தங்களுக்கு தேவையான புத்தம் புதிய நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சராசரியாக ஒருநபர் நாள் ஒன்றுக்கு 400 கிராம் காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிடவேண்டும் என்று உலக உணவு அமைப்பு (WFO) கூறுகிறது. நாம் அவ்வாறு செய்கிறோமா? இல்லை. காய்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தும் அவற்றை உபயோக படுத்தத் தவறிவிட்டோம். இதனால் சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு சத்துக்கள் சரிவர கிடைப்பதில்லை.
எனவே நாம் வீட்டிற்கு வீடு தோட்டம் அமைத்து உற்பத்தி பெருக்கிட சில செலவில்லாத யுத்திகளைக் கையாள வேண்டும்.
-
பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், பாகல் போன்ற கொடி வகைக் காய்கறிகளில் அயல் மகரந்தச் சேர்க்கை முலமாக காய் கள் உருவாக்கும் முயற்சியில் தேனீக்களின் உதவி தேவை.
-
எனவே வாய்ப்பு இருக்கும் இடங்களில் தேனிப்பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். நமக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
-
அதாவது மாதந்தோறும் தேனும் கிடைக்கும் காய்களும் கிடைக்கும்.
-
கொடி வகைச் செடிகளில் 10 முதல்12 இலைகள் வளர்ந்த பிறகு அதன் நுனியை கிள்ளி விட வேண்டும் .
-
இதற்கு பிறகு அந்த நுனியில் இருந்து வலது அல்லது இடது பக்கத்தில் உருவாக்கும் கிளையில் இருக்கும் 10- 12வது இலைகளில் அடுத்த நுனியை கிள்ளிவிடவேண்டும்.
-
இது போல் மூன்றாம் முறையாக நுனியை கிள்ளிய பின்னர் நுனியை கிள்ளத்தேவை இல்லை.
-
1 மற்றும் 2வது நுனியைக் கிள்ளாமல் இருந்தால் அதிக அளவில் ஆண் பூக்கள் உற்பத்தியாகி இருக்கும். சரியான மகசூல் கிடைக்காது.
-
அதற்கு பிறகு வருகின்ற 3மற்றும்4வது கிளையில் அதிக பெண் பூக்கள் உருவாகி தரமான காய் கனி கிடைக்கும்.
-
நாம் இந்த மாதிரி கிள்ளி விடாமல் இருந்தால் காய் குறைந்த அளவில் உற்பத்தியாகி ஒழுங்கற்ற வடிவில் உண்டாகும். எனவே இந்த யுத்திகளைக் கையாள வேண்டும்.
-
சாம்பல் பொட்டுகள்
-
காய்கள் முற்றியநிலைய அறிந்து கொள்ள அதன் மீது உள்ள சாம்பல் பொட்டுகள் உதிர் வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
-
காய் கறி பயிர்களுக்கு வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தகவல்
அக்ரி சு .சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
பாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!!
Share your comments