விருதுநகர் மாவட்டத்தில், சிறு குறு விவசாயிகள் கோடை உழவு செய்ய வாடகையின்றி டிராக்டர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் ஆய்வு (Collector inspection)
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள பிசிண்டி கிராமத்தில் வேளாண்மைதுறை மற்றும் டாபே நிறுவனம் மூலம், மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி இலவசமாக மேற்கொண்டு வரும் உழவுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேளாண் இயந்திரங்கள் (Agricultural machinery)
தற்போது நிலவிவரும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், 2 ஏக்கருக்குக் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு டாபே நிறுவனம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 2314 விவசாயிகளுக்கு இலவசமான வேளாண் இயந்திரங்களைக் கொண்டு உழவுப்பணிகளை மேற்கொள்ளப்பட்டது.
819 விவசாயிகளுக்கு (For 819 farmers)
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் தற்போது வரை 1,494 ஏக்கர் பரப்பில் 819 விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தில் இலவசமான உழவுப்பணி மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்தப் பிண மாவட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
டிராக்டர்களைப் பயன்படுத்துதல் (Using tractors)
அதன்படி டாபே நிறுவனம் இவ்வருடம் உழவுப் பணிகளை மேற்கொள்ள சிறப்பாக ஆழமாக உழும் கலப்பைகள் கொண்ட டிராக்டர்களை பயன்படுத்தி வருகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், டிராக்டர் மீது அமர்ந்து ஆழ உழவு மேற்கொள்வதை செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலத்தினை ஆழ உழவு செய்வதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்பட்டு, மண்ணின் தன்மை மேம்படுகிறது.
பூச்சிகள் அழிப்பு (Insect extermination)
படைப்புழு மட்டுமின்றி இதர பூச்சிகள் மற்றும் வண்டுகளின் கூட்டுப் புழுக்களும் மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு அவைகளும் அழிக்கப்படுகின்றன.
அதிக மகசூல் (High yield)
டிராக்டர் மூலம் உழுவதால், தேவையற்ற களைகள் அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். கோடை உழவிற்கு முன் நிலத்தில் மண்மாதிரி எடுக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலப் பரப்பில் 4 அல்லது 5 இடங்களில் மண் மாதிரிகள் சேகரித்து, அதனைப் பிரித்து, உரிய விபரங்களுடன் விருதுநகர், மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி, ஆய்வின் அடிப்படையில் நிலத்திற்கு தேவையான உரங்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வேளாண் துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
செயல்விளக்கம் (Process)
பின்னர் மண் மாதிரி சேகரம் செய்வது குறித்து செயல் விளக்கம் வேளாண் துறை மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
ஆன்லைனில் பதிவு (Register online)
தமிழ்நாடு உழவன் செயலி அல்லது ஜே. பார்ம் செயலியைப் பதவிறக்கம் செய்து, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தொலைபேசி எண் அல்லது 18004200100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது, அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், வேளாண்மை இணை இயக்குநர் ச. உத்தண்டராமன், அதிகாரிகள் மற்றும் டாபே நிறுவன கள அலுவலர் கிருஷ்ணகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க...
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!
30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!
Share your comments