இயற்கையின் நமக்கு அளித்தக் கொடைகளுள் மண்தான் முதன்மையானது. அந்த மண்ணை வளம் மிக்கதாக வைத்துக்கொள்வது, நமக்கு மட்டுமல்ல, நம் எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவி என்றால் அது மிகையாகாது.
மண் வளமாக இருந்தால் தான் மக்கள் வளமாக இருப்பார்கள் என்பது முது மொழி. இன்றைய கால கட்டத்தில மண் வளம் என்பது உலகளவில் அழிந்து வருகிறது. ஜ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தற்போது நாம் மண்வளத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கா விட்டால், உலகின் மேற்பரப்பு மண்ணின் வளம் அடுத்த 60ஆண்டுக்குள் முற்றிலுமாக காணமாக போய்விடும்.
மலடாகும் ஆபத்து (Risk of infertility)
மண் வளம் சீரழிந்து மலடாக போய் விடும் என எச்சரித்துள்ளன. மேலும் சர்வதேச விஞ்ஞானிகள் 2045ஆம் ஆண்டிக்குள் உலகின் மக்கள் தொகை 930கோடி யாக அதிகரித்து விடும் எனவும் அதே சமயம் உணவு உற்பத்தி 40சதவீதம் குறைந்து விடும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளன.
இந்த நிலை உருவானால் உள் நாட்டு கலவரங்கள்,பசி,பட்டினி,விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் அதிகரித்தும் மக்களின் நலமும் வளமும் பாதிக்கப்படும். அதாவது இலங்கை மக்கள் தற்போது அல்லல்படுவதைப்போல, இந்திய மக்களும் அவதிப்படும் நிலை ஏற்படலாம். எனவே கிராமப்புற விவசாய மக்களின் அடிப்படையான மண் வளத்தை மேம்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இப்போதே களமிறங்கிட வேண்டும்.
தற்போதைய மண்ணில் கரிம சத்து விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதனை சரிசெய்ய குளகரம்பை, ஆற்று வண்டல் மண் எடுத்து நிலத்தில் இடவேண்டும்.மண்பரிசோதனை, தண்ணீர் பரிசோதனை, மிகவும் குறைவான கட்டணத்தில்(₹20)பரிசோதித்து அதன் பரிந்துரை அடிப்படையில் உரமிட வேண்டும். ஆட்டு கிடை, மாட்டுக்கிடை போன்ற வற்றை வாய்ப்பு உள்ளபோது நிலத்தில் இட வேண்டும்.
கோடை உழவு, ஆழச்சால் அகலபாத்தி அமைத்து பெய்கின்ற மழை நீரை சேமிக்க வேண்டும். இவ்வாறாக தொடர்ந்து செய்து வந்தால்தான், மண் வளமாக மாறும். நாம் அதிக விளைச்சல் கண்டு நலமாக இருப்போம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?
Share your comments