கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், அதற்கான குழி எடுக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
செலவு அதிகம் (The cost is high)
விலைவாசி ஏற்றத்தில் காரணமாக விவசாயத்திற்கு ஆகும் சாகுபடிச் செலவு, அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நிதிச்சுமையைச் சந்திக்க நேர்கிறது.
மானியம் (Subsidy)
எனவே விவசாயிகளின் அந்த நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், அரசு சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியமானது, பல்வேறு விதிகளின்படி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், அதற்கான குழி எடுக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
எந்தெந்தப் பயிருக்கு? (For which crop?)
காய்கறி பயிர்கள், பழச்செடிகள், பூச்செடிகள், மருத்துவபயிர்கள் மற்றும் தென்னை சாகுபடிக்குச் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது.
விவசாயிகள் (விவசாயிகள் )
சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கும்; இதர, விவசாயிகளுக்கு,12.5 ஏக்கர் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.1200 (ரூ.1200)
சொட்டு நீர்ப் பாசனக் குழாய் அமைப்பதற்குக் குழி தோண்ட, ஒரு ஏக்கருக்கு, 1,200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், சொட்டு நீர்ப் பாசனம் அமைத்த பயனாளிகளுக்கு, துணைநிலை நீர் சேமிப்பு திட்டம் கீழ், மோட்டார் மற்றும் நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க, 50 சதவீதம் மானியம் அனுமதிக்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள் (தேவைப்படும் ஆவணங்கள்)
-
சிட்டா
-
அடங்கல்
-
ரேஷன்கார்டு
-
வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்
-
சிறு, குறு விவசாய சான்று
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3
தொடர்புக்கு (Contact)
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மேற்கூறிய ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, 95850 98230, 99655 62700 ஆகிய எண்களில் தொடர்புகொண்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!
கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!
Share your comments