விவசாயிகள், விளைநிலங்களில் பந்தல் அமைத்து கொடி வகை சாகுபடி செய்ய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு பிரதானமாக காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் கொடி வகை காய்கறிகள் உற்பத்தியிலும் சமீபகாலமாக, விவசாயிகள் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
இந்த சாகுபடியைப் பொறுத்தவரை, விளைநிலங்களில் பந்தல் அமைக்க, அதிக செலவிட வேண்டியுள்ளதால் தோட்டக்கலைத்துறை வாயிலாக மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், மானியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-
உடுமலை பகுதி விவசாயிகள், விளைநிலங்களில் பந்தல் அமைத்து கொடி வகை சாகுபடி செய்ய அரசின் மானிய திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி பந்தல் அமைக்க ஒரு எக்டேருக்கு அதிகப்பட்சமாக ரூ.2 லட்சம் அல்லது 50 சதவீத மானியம், தோட்டக்கலைத்துறையால் வழங்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள், உடனடியாக வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை நேரடியாக அணுகி விண்ணப்பிக்கலாம்.இதேபோல் விளைநிலங்களில் தொழிலாளர் தேவையை குறைக்க விவசாயிகள் மினிடிராக்டர் பயன்படுத்துகின்றனர்.
இந்த டிராக்டர் வாங்கவும், அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது, இத்திட்டத்துக்கும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
Share your comments