உடுமலைப்பகுதியில், பூத்துக்குலுங்கும் சூரியகாந்திப் பூக்களைத் தேடி வந்து சேதப்படுத்தி நாசமாக்கும் கிளிகளை விரட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர்.
சூரியகாந்தி சாகுபடி (Cultivation of sunflower)
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் ஒரு சில இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாவாரி சாகுபடி (Rainfed cultivation)
சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.
4 பட்டங்கள் (4 Seasons)
இதுதவிர இறவைப் பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடியை மேற்கொள்ளலாம். அவ்வகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும்.
விதைகள் தேர்வு (Selection of seeds)
அதேநேரத்தில் பட்டத்துக்குத் தகுந்தாற் போல் விதைகளைத் தேர்வு செய்வது அவசியமாகும். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதைகள் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன.
விதை நேர்த்தி கட்டாயம் (Seed treatment is mandatory)
இருப்பினும் இவற்றிலும், விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.
ஊட்டச்சத்து தேவை (Nutrition is needed)
மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரமாகத் தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்க வேண்டும்.
மகரந்தச் சேர்க்கை (Pollination)
சூரியகாந்திப் பூக்களை பொறுத்தவரை மகரந்தச் சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.
தேனீக்கள் குறைவு (Bees are scarce)
தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும். அதற்குப் பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாகத் தேய்த்து விடுவது நல்ல பலன் தரும்.
90 நாட்களில் அறுவடை (Harvest in 90 days)
சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.
கிளிகளிடம் இருந்து (From parrots)
இந்நிலையில், மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்துப் பயிரைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக விவசாயிகளுக்கு உள்ளது. மணிகள் கிளிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், அவை கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கின்றன.
ஓசை எழுப்பி (Whispering)
தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது அறுவடைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.
900 கிலோ மகசூல் (900 kg yield)
ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
தற்போது செய்துள்ள சாகுபடி இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மேலும் படிக்க...
கிளிகளிடம் இருந்து பயிர்களைக் காக்க நைலான் வலை- விவசாயி புதிய யுக்தி!
மகசூல் அதிகரிக்க உதவும் தேனீ வளர்ப்பு-ஒரு நாள் சிறப்பு பயிற்சி
Share your comments