மாடி தோட்டத்தில் அசத்தி வரும் மணலி மண்டலம், 187 வகையான செடிகளை பயிரிட்டு, பராமரிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, குப்பை தொட்டிகள் (Dustbin) அனைத்தும் அகற்றப்பட்டு, குப்பை தொட்டி இல்லாத மண்டலமாக, மணலி உருவெடுத்தது. தொடர்ந்து, இயற்கை உரம் (Organic Fertilizer) தயாரிப்பு, கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை உள்ளிட்டவற்றில், சிறப்பான செயல்பாடு மூலம், மற்ற மண்டலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது
பிரம்மாண்ட மாடித் தோட்டம்
மியாவாக்கி (Miyawaki) எனும் நகர்ப்புற அடர்வன திட்டத்தில், மண்டலத்தின் இரண்டு இடங்களில், 20 லட்சம் ரூபாய் செலவில், 20 ஆயிரத்து, 800 சதுர அடி நிலத்தில், 6,765 செடி வகைகள், 2 அடி இடைவெளியில் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. ஊக்குவிப்பு முயற்சியாக, மண்டல அதிகாரி ராஜசேகர் (Rajasekar) மேற்பார்வையில், ஊழியர்கள் அலுவலக மொட்டை மாடியில், பிரம்மாண்ட மாடித் தோட்டம் (Terrace garden) அமைத்துள்ளனர். தனித்தனி பைகளில், குறிப்பிட்ட இடைவெளியில், செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
187 வகையான செடிகள்
மாடித் தோட்டத்தில் பீட்ரூட், கத்தரிக்காய், பிரண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறி செடிகள், நித்திய கல்யாணி, செம்பருத்தி உள்ளிட்ட பூச்செடிகள், பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்ட கொடி வகைகள் என, 187 வகையான செடிகள் பயிரிடப்பட்டு, ஊழியர்களால் பராமரிக்கப்படுகின்றன. செடிகளுக்கு, மக்கும் குப்பையில் இருந்து தயாராகும், இயற்கை உரங்கள் மட்டுமே போடப்படுகின்றன. அறுவடையாகும் (Harvest) காய்கறிகள், முதற்கட்டமாக, ஊழியர்கள், அதிகாரிகள் பகிர்ந்து, உணவில் சேர்த்து சுவைத்து வருகின்றனர். இயற்கை உரத்தால் விளையும், காய்கறிகள் நல்ல சுவையுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாடி தோட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, விளையும் காய்கறிகள் மற்றவர்களுக்கும் வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. மக்களும், தங்கள் வீடுகளில் மாடி தோட்டம் அமைத்து, இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து பயன்படுத்தலாம். வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பையை செடிகளுக்கு உரமாக்கினால், நல்ல சுவையான காய்கறிகள் கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், வடக்கு வட்டார துணை கமிஷனர் ஆகாஷ் ஆகியோர், மாடித்தோட்டத்தை, பார்வையிட்டு முயற்சியை ஊக்குவித்தது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
1 நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!
தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!
Share your comments