நம் உடல் நலனைப் பேணிப் பாதுகாப்பதற்காக, இயற்கை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று தேங்காய். ஏனெனில் தேங்காய், இளநீர், தேங்காய் தண்ணீர், கொப்பரைத் தேங்காய் என பலவிதங்களில் நமக்கு பலனளிக்கிறது. நம்மூரில் விற்கப்படும் தேங்காய்க்கு அதிகபட்சம் 50 ரூபாய் விலை கிடைக்கும்.
ஆனால், நான் சொல்ல வருவது 60,000ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தேங்காய்.இதன் பெயர் கொகொடிமர். கிழக்கு ஆப்ரிக்கா நாடான, சிசேர்ஸ் தீவு பகுதியில் விளைகிறது. ஒரு தேங்காயின் விலை, 60 ஆயிரம் ரூபாய். இது போன்ற தென்னை மரங்கள், 4,000 மட்டுமே அங்கு உள்ளன.
ஒரு மரம் வளர்ந்து காய்கள் தர, 100 ஆண்டுகள் ஆகும். அதேநேரத்தில் ஒரு தேங்காய் வளர்ச்சி அடைய, ஏழு ஆண்டுகள் தேவைப்படுகிறது. எனவே தான், இதன் விலை அதிகமாக இருக்கிறது.இந்தத் தேங்காயை வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லத் தடை விதித்து சட்டம் வகுத்துள்ளது அந்த நாடு.
காரணம், இந்த தென்னை மரம் வேறு எங்கேயும் வளரக் கூடாது என்பதே. ஒரு தேங்காயின் எடை, 25 முதல் 30 கிலோ வரை இருக்கும்.இந்த தேங்காய் வைத்திருப்பவர் கேரளாவை சேர்ந்தவர். இவர், அந்நாட்டின் சிறப்பு அனுமதி பெற்று மூன்று தேங்காய்களை வாங்கி வந்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments