விவசாயம் என்று எடுத்துக்கொண்டாலே அதற்கு உறுதுணையாக இருந்து, உலகம் வாழ வழி செய்வதில், தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அதனால்தான் இவற்றைத் தோட்டத்துத் தேவதைகள் என்று அழைக்கிறோம். இன்று உலகத் தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகத்துல் கெட்டுப் போகாத ஒரே ஒரு உணவுப்பொருள் என்றால், அது தேன் தான். உலகம் முழுவதும் கிடைக்க கூடிய பொருளும் தேன்மட்டுமே. வேத காலம் முதல் இன்றைய கால கட்டத்திலும் வாழும் உயிரினம் தேனீக்கள்.
மே 20ம் தேதி (May 20th)
தற்போதைய அவசர உலகில்,விவசாயத்தைப் பொருத்தவரை, அதிக அளவில் மகசூல் எடுப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதற்காகவே இரசாயன உரங்களையும் ,வீரியமிக்க பூச்சி கொல்லி மருந்துகளை உபயோகித்து, மண்ணையும் உயிரினங்களையும் மலடாக்கும் வேலை, வெகுத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தது உண்டா என்று ஒவ்வொரு வரும் நினைத்து பார்க்க தான் இந்த மாதிரியான தினங்கள் வந்து நம்மை விழிப்படைய செய்கின்றன. உலக தேனீக்கள் தினம் ஆண்டு தோறும் மே மாதம் 20ம் தேதியில் கொண்டாப்பட்டு வருகிறது. 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுலோவேனியா இடத்தை சேர்ந்த அன்டோன் ஜன்சா என்பவரின் பிறந்த நாளே, உலக தேனீக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவர் நவீன தேனீக்கள் வளர்ப்பு முறைகளின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஆவார்.
மனித குலம் அழியும் (Mankind will perish)
தேனீக்கள் அழிவை சந்தித்தால் மனித இனமும் அழிவை சந்திக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பூக்களின் மதுரசுரப்பில் கசியும் இனிப்பான மதுரத்தை தேனீக்கள் சேகரிக்கின்றன. அதனை எடுப்பதற்காக பல மைல் தூரம் பயணித்து, தங்களுடைய உமிழ் நீருடன் கலந்து வயிற்றில் சேகரிக்கின்றன. தேனீக்களின் உமிழ் நீரில் உள்ள "இன்வர்டோஸ்" என்ற நொதி பொருள் பூக்களின் மதுரத்தில் சேர்வதால் எற்படும் வேதி மாற்றத்தால் தேன் உண்டாகிறது.
அவ்வாறு அயல் மகரந்த சேர்கை நடை பெறத் தேனீக்கள் உதவுகின்றன.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க கிட குடிசை தொழிலாக, பண்ணைசார்ந்த தொழிலாக தேனீ வளர்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தேனீ வளர்ப்பிற்கு பயிற்சியும் மானிய நிதி உதவி யும் வழங்குகின்றன.
எனவே இந்த நாளில் வாய்ப்பு உள்ள இடங்களில் தேனீக்கள் வளர்த்து விவசாயத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் பெருக்கிட முயற்சி செய்வோம் என்று உறுதி எடுப்போம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!
Share your comments