பனிப்பொழிவில் இருந்து தேயிலை (Tea) செடிகளை பாதுகாக்க விவசாயிகள் கவாத்து செய்வது நல்ல பலன் தரும் என்பதால், விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு பனிக்காலம் தொடங்கியதால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொழுந்துகள் கருக தொடங்கிவிட்டன. இதனால் பச்சைத் தேயிலை சாகுபடி பாதிக்கப்படும்.
இதனை கருத்தில் கொண்டு பனிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாப்பதற்காக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சில விவசாயிகள் தேயிலை தோட்டத்தில் மேல் கவாத்தும், பிற விவசாயிகள் அடிக்கவாத்தும் செய்கின்றனர்.
அவ்வாறு கவாத்து செய்து அகற்றிய இலைகளை, இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக தேயிலைச்செடிகளின் வேர்கள் உள்ள பகுதியில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேயிலை செடிகளுக்கு அடிக்கவாத்து செய்வது மிகவும் சிறந்தது. பனிக்காலங்களில் மேல் காவாத்து செய்தால், தரமான தேயிலை கொழுந்துகள் வளரும்.
கவாத்து பணி முடிந்த பிறகு தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து தேயிலை செடிகளுக்கு அமோனியம் சல்பேட் மற்றும் யூரியா பேஸ் உரங்களை இட்டு முறையாக பராமரித்து வந்தால் மார்ச் மாதத்திற்குள் தரமான தேயிலை கொழுந்துகள் வளர்வதுடன், தேயிலை சாகுபடியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கோத்தகிரி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!
Share your comments