தமிழகத்தில் முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு (Horticulture Department) ரூபாய் 5 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கையால, முருங்கை சாகுபடி இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உற்பத்தியை அதிகரிக்க திட்டம்:
முருங்கை (Drumstick) அரிய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மரம். முருங்கையை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, அரசு உதவி வரும் நிலையில், முருங்கை சாகுபடிக்காக தோட்டக்கலை துறைக்கு ஒதுக்கிய 5 கோடி ரூபாய் (5 Crores) நிதியால், விவசாயிகளுக்கு நிச்சயம் பலன் கிட்டும். இனிவரும் காலங்களில், முருங்கை சாகுபடி மட்டும் குறிப்பிட்ட அளவு உற்பத்தியை (Production) எட்டுவதற்கு, மேன்மேலும் பல நல்ல திட்டங்களை அரசு உருவாக்கும் தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. சாகுபடி அதிகமானால், விவசாயிகளுக்கு இலாபமும் அதிகளவில் கிடைக்கும்.
விவசாயிகளை ஊக்குவிக்கத் திட்டம்:
மக்களிடையே பிரசித்தி பெற்றுள்ள முருங்கை, அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள். முருங்கைக் கீரை மற்றும் முருங்கைக் காய் இவையிரண்டும் அதிகளவில் பயன்பட்டு வருகிறது. முருங்கை சாகுபடியை விவசாயிகளிடையே ஊக்குவிக்க (promote) அரசு ஒதுக்கியுள்ள நிதி, விவசாயிகளுக்கு ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. முக்கியமாக இளம் தலைமுறையினரும் (Young Generation) விவசாயத்தில் கால்தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலைத் துறைப் பயிர்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த மாவட்ட மற்றும் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலைத் துறையை அணுகி, பயன்பெறலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இனி கடற்கரை மணலிலும் விவசாயம் செய்யலாம்! தாவரவியல் பேராசிரியர் கண்டுபிடிப்பு!
மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள்! மாசில்லா தீபாவளிக்கு தயார்!
Share your comments