இயற்கை விவசாயம் என்பது தொடங்கும் காலங்களில் சவால் மிகுந்ததாக இருக்கிறது. இருப்பினும் மண்ணைப் பொலபொலப்பானதாக மாற்றிவிட்டால், ரசாயன விவசாயத்திற்கு இணையான மகசூலைப் பெறுவது சாத்தியமே.இந்த சவாலை எதிர்கொண்டு, சரிநிகர் மகசூலைப் பெற டிரைக்கோடெர்மா விரிடி உதவுகிறது.
டிரைக்கோடெர்மா விரிடி பயன்கள் (Benefits)
-
டிரைக்கோடெர்மா விரிடி எதிர் உயிர் பூஞ்சாணம் எனப்படும். இது வேர்களில் வளர்ந்து மற்ற பூஞ்சாணங்களை வளராமல் தடுத்துவிடும்.
-
அனைத்துப் பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும்.
-
பயிர்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது
மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன.
-
வேரின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதால், வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.
தயாரிக்கும் முறை (Preparation Method)
சிறிய பாட்டில்களை கழுவி சுத்தமாக காயவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை என்ற விகிதத்தில் கலந்து ஒரு பாட்டிலுக்கு 200 மில்லி வீதம் ஊற்றவேண்டும். பிறகு இவற்றை இனாகுலேட் செய்யவும்.அதாவது கிருமிகள் இருந்தால் அவற்றை வெளியேற்ற 2 மணிநேரம் சூடேற்றவும்.
அவை ஆறியபிறகு எடுத்து வெளிப்புறம் உள்ள கிருமிகளை வெளியேற்ற யூவி (UV)லைட்டில் வைக்கனும். டிரைக்கோடெர்மா விரிடியின் தாய்வித்தை சிறிதளவு எடுத்து பாட்டிலில் போட்டு அவற்றை படுக்கை வசமாக வைக்கனும்.
படுக்கை வசமாக வைப்பதால் பாட்டில் முழுவதும் டிரைக்கோடெர்மா விரிடி வளர்ந்துவிடும். இவ்வாறு படுக்கை வசமாக வைக்காவிடில் சர்க்கரைப்பாகு இருக்கும் அளவுக்குத்தான் டிரைக்கோடெர்மா விரிடி வளரும்.
டிரைக்கோடெர்மா விரிடி நன்றாக வளர 7 நாட்கள் ஆகும்.பிறகு அவற்றை எடுத்து மிக்சியில் ஊற்றி சிறிது நேரம் அரைக்க வேண்டும்.
ஒரு பாட்டிலுக்கு 200மில்லி டிரைக்கோடெர்மா விரிடியில் 400 கிராம் டால்கம் பவுடரை கலந்து நிழலில் உலர்த்தவேண்டும்.
இதனை அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்.
அடியுரம்
2- 3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 20 கிலோ மக்கிய தொழு எரு அல்லது மண்புழு எருவில் கலந்து நிழலில் ஒரு வாரம் வைத்திருந்து பிறகு பயிருக்கு போடலாம்.
தண்ணீர் தெளித்து ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் இவ்வாறு போடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
நாற்று நேர்த்தி
நாற்று நேர்த்தி ஒரு கிலோ டிரைக்கோடிடர்மா விரிடியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றை நனைத்து நடவு செய்யலாம்.உலர்ந்தவற்றை எடுத்து சலித்து 1 கிலோ வீதம் எடுத்து சலித்து பாக்கெட் போடவேண்டும்.
மேலும் படிக்க...
செரிமானப் பிரச்னை தீர சீரகம்- அக்டோபர் மாதத்தில் பயிரிட சிறந்த மருத்துவ மூலிகை!
இயற்கை உரத்தில் உள்ள சத்துக்கள் சதவீதம் தெரியுமா? விபரம் உள்ளே!
Share your comments