திண்டுக்கல் சிறுமலையின் ஒரு பகுதி மதுரையை ஒட்டி உள்ளது. அதைச் சுற்றியுள்ள மலைத்தோட்ட விவசாயிகள் 701 பேர் ஒருங்கிணைந்து சிறுமலை காய்கறி உற்பத்தியாளர் நிறுவனத்தை துவங்கி சாதித்துள்ளனர்.
14 கொண்டை ஊசி வளைவுகளிலும் ஆங்காங்கே தோட்டமிட்டுள்ள விவசாயிகளை ஒருங்கிணைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. தானும் ஒரு விவசாயியாக இருப்பதால் கிரெட் தொண்டு நிறுவன இயக்குனர் அழகேசன் (Alhagesan) சாத்தியப்படுத்தியுள்ளார்.
விற்பனை
ஒன்றரை ஆண்டுகள் எந்த பலனும் இல்லாமல் இவர்களை ஒருங்கிணைத்தார். இப்போது இந்நிறுவனத்தின் கீழ் விவசாயிகள் காய்கறி, பழங்கள், தேங்காய், மிளகு, காப்பி உற்பத்தி செய்து விற்பனையும் செய்கின்றனர் என்கிறார் சேர்மன் கீதா.
விவசாயிகள் ஒற்றுமையே முக்கியம்
சேதுராஜா, இயக்குனர்: மூன்றரை ஏக்கரில் காப்பி, எலுமிச்சை, வாழை, அவகோடா, பீன்ஸ், சவ்சவ் சாகுபடி (Cultivation) செய்கிறேன். இதுவரை நேரடியாக மார்க்கெட்டிற்கு அனுப்பிய போது 10 சதவீத கமிஷன் பிடித்துக் கொண்டனர். இப்போது நாங்கள் கம்பெனியாக செல்வதால் 5 சதவீதாக குறைத்துக் கொண்டனர். விவசாயிகள் ஒன்றுபட்டால் விலையும் நிர்ணயம் செய்யலாம் என்பதற்கு நாங்கள் உதாரணம்.
குழுவிலிருந்து நிறுவனம்
கீதா, சேர்மன்: 2 ஏக்கரில் குத்தகை எடுத்து அவரை, சவ்சவ், பீன்ஸ் விவசாயம் செய்கிறேன். இப்பகுதியில் மட்டும் 10ஆயிரம் ஏக்கரில் சவ்சவ் சாகுபடி உள்ளது. 75 சதவீதம் சவ்சவ் தான். பத்தாண்டுகளுக்கு முன் உழவர் குழுவாக ஆரம்பித்து 2017 மார்ச் மாதத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக மாறினோம். மலையிலிருந்து காய்கறிகளை கொண்டு வர ஏற்று கூலி, இறக்குகூலி செலவு செய்தோம். பிக்கப் வேன் வாங்குவதற்கு நபார்டு வங்கி (NABARD Bank) 50 சதவீத நிதி உதவி செய்தது.
மாவட்ட நிர்வாகம் கடை தரவேண்டும்
தம்பிராஜ், இயக்குனர்: சிவகுமார், குணசேகரன், வெள்ளி, ரவிச்சந்திரனும் இயக்குனர்கள். கஷ்டப்பட்டு விளைவித்தால் கமிஷன் ஏஜன்ட் சொல்லும் விலைக்கு தான் விற்க முடிகிறது. எங்களுக்கு மார்க்கெட்டில் நிரந்தரமாக ஒரு கடையை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும். நாங்களும் கடையின் மூலம் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு நல்ல விலைக்கு விற்க முடியும். எங்களது சாகுபடிக்கு தேவையான சிறு சிறு கடன்களை நிறுவனத்தின் மூலம் பெறுவதால் வெளியில் கூடுதல்
வட்டிக்கு வாங்கி கஷ்டப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.
தொடர்புக்கு: 94434 68079.
மேலும் படிக்க
விதைச்சான்று உரிமம் பெறாத தென்னங்கன்றுகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்! வேளாண் அதிகாரிகள் யோசனை!
விற்க முடியாமல் கொடியிலேயே அழுகும் கிர்ணி பழங்கள்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Share your comments