கடலூரில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சுமார் 5500 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாயின.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
பலத்த மழை (Heavy rain)
இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கிநின்றது. இந்த மழை தொடர்ந்து இன்றும் பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இன்று காலை மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சாலையில் செல்வதைக் காணமுடிந்தது.
கரைகளைத் தொட்டபடி
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக கடலூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறுகளில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
நெற்பயிர்கள் நாசம்
தொடர்ந்து பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - இந்த 4 மாவட்டங்களில்!
Share your comments