1. தோட்டக்கலை

வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Vastu plants to grow at home!

வீடு கட்டும் போது மட்டுமல்ல, தற்போது எல்லாமே வாஸ்து முறைப்படியே செய்யப்படுகின்றன. குறிப்பாக, புதிய வீடுகள், அடிக்கு மாடி குடியிருப்புகள் எல்லாமே வாஸ்து முறைபடி கட்டப்பட்டு வருகின்றன.

நேர்மறை எண்ணங்கள் (Negative thoughts)

வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது மட்டும் போதாது. ஏனெனில் வாஸ்துச் செடிகள் கூட உள்ளன. இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது.

வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப் பவர்கள் கீழ்க்கண்ட 10 வகையான வாஸ்து செடிகளை நட்டு பராமரித்து வந்தால் அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் உருவாகுவதுடன், செல்வ செழிப்பும் வளமும் நலமும் கிடைக்கும் என்று வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

துளசிச் செடி (Basil)

  • இது பெருமாளுக்கு உகந்தது.

  • அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதால் உடல் நலத்திற்கு தேவையான சுத்தமானக் காற்று கிடைக்கிறது.

மணி பிளான்ட் (Mani Plant)

  • இந்தச் செடி செல்வ வளத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

  • அதனாலே இதன் பெயரில் மணி (பணம்) உள்ளது.

வாடாமல்லி 

இதன் பூக்கள் எப்போதும் வாடாது. வாடாத பூக்கள் இருப்பதால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

கோழிக்கொண்டை 

இந்தச் செடியின் பூக்களும் வாடாது, மாலை கட்டுவதற்கு பயன்படுகிறது. பார்ப்பதற்கு நல்ல ரம்மியமான சூழலை உருவாக்கி குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு வித்திடும்.

தங்க அரளி

மஞ்சள் கலரில் பூக்கள் கொத்து கொத்தாக பூக்கம் செடி இது. இதனை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

லக்கி முங்கில் செடி 

இதனைச் சீன வாஸ்துச் செடி என்கிறார்கள். இதன் சிறப்பு என்னவென்றால்,வீட்டிற்குள் வளர்க்கலாம். செல்வமும் மன ரீதியாக அமைதியும் கிடைக்கும்.

கற்றாழை (Cactus)

இது மருத்துவ குணம் நிறைந்தது. கற்றாழைச்செடிகள் பூக்கும் போது வீட்டில சுப நிகழ்வுகள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கருதுகின்றனர்.

செம்பருத்தி

இதன் பூக்கள் பல வண்ணங்களில் இருந்தாலும்கூட சிவப்பு வண்ணமே சிறந்தது. மருத்துவ குணம் வாய்ந்தது.

தொட்டால் சினுங்கி
இது சிலர் மூட்கள் இருப்பதால் வளர்க்க கூடாது என்று செல்வதுண்டு, அது தவறானது. இதன் இலைகளைத் தொடுவதன் மூலமாக நமக்கு உடலில் காந்த சக்தி உண்டாகும். அத்துடன் அக்குபஞ்சர் எபெகட் உருவாகும்.

தகவல் 

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

94435 70289.

மேலும் படிக்க...

இன்னுயிர் காப்போம் திட்டம்: விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை!

புதிய தொழில்முனைவோருக்கு தொலை நோக்குப்பார்வை அவசியம்!

English Summary: Vastu plants to grow at home! Published on: 24 December 2021, 11:09 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.