குடைமிளகாய்ச் செடியின் செடியியல் பெயர் காப்சிக்கம் ஆன்னம் (Capsicum annuum). சிவப்பு, மஞ்சள், பச்சை, செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறங்கள் பரவலாக காணப்படுகின்றன.
இரகங்கள்:
கே டீ பி எல் -19, பயிடாகி கட்டி
மண்:
நல்ல வடிகால் வசதியுடைய மணல் கலந்த பசளை மண் அல்லது உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண் குடை மிளகாய் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
விதைப்பு பருவம்: ஜூன் - ஜூலை.
விதையளவு: 500 கிராம் / எக்டர்.
இடைவெளி: 60 x 45 செ.மீ
நாற்றங்கால்:
7 மீ நீளம், 1.2 மீ அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட 10-12 படுக்கைகளை தயார் செய்தல் வேண்டும். விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் 15:15:15 NPK காப்ளக்ஸ் உரத்தினை விதைத்த 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.
நடவு:
ஆரோக்கியமான நாற்றுகளை 45 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
உர மேலாண்மை:
தொழுஉரம் 20-25 டன்/எக்டர், 60, 100 மற்றும் 60 கிலோ NPK/எக்டர் உரத்தினை அடியுரமாக இட வேண்டும். எக்டருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.
நோய்கள்:
ஆந்தராக்னோஸ்
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்கவும்.
- காய் அழுகல் நோய்
ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிக்கவும்.
- சாம்பல் நோய்
0.3 சதவித நனையும் கந்தகத்தை தெளிக்கவும்.
மகசூல் : 25 - 35 டன் / எக்டர்
Share your comments