இரகங்கள்: ஊட்டி 1, கிரிம்சன்குளோப், டெட்ராய்ட் அடர் சிகப்பு, சிவப்பு பந்து.
மண் மற்றும் தட்பவெப்பநிலை: இது அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மையுடையது. இப்பயிர் குளிர்ந்த் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும்.
பருவம்: ஜீலை - ஆகஸ்ட்
விதையும் விதைப்பும்
விதை அளவு: எக்டருக்கு 6 கிலோ விதைகள்
நிலம் தயாரித்தல்
நிலத்தை 2-3 முறை உழுது பண்படுத்தி பார்கள் பிடிக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரமாக எக்டருக்கு 20 கிலோ மக்கிய தொழு உரம், 60 கிலோ தழைச்சத்து, 160 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். விதைகளை 10 செ. மீ இடைவெளி விட்டு பார்களின் பக்கவாட்டில் விதைக்கவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு தேவைப்படும் போதும் நீர் பாய்ச்சவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
பின்செய்நேர்த்தி: பீட்ரூட் விதை ஒவ்வொன்றிலிருந்தும் பல செடிகள் முளைக்கும், விதைத்த 20வது நாளில் நல்ல வளமான செடிகளை குத்துக்கு ஒன்று வீதம் விட்டு மற்றவற்றைக்கலைத்து விடவேண்டும். விதைத்து ஒரு மாதம் கழித்து செடிகளுக்கு 60 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பயிர்ப் பாதுகாப்பு
வண்டுகள் மற்றும் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
இலைப்புள்ளி நோய்: எக்டருக்கு ஒரு கிலோ மேன்கோசெப் தெளித்து
கட்டுப்படுத்த வேண்டும்.
வேரழுகல் நோய்: இந்நோயைக் கட்டுப்படுத்த 0.1 சதவீதம் கார் பென்டாசிம் மருந்தை செடிகளுக்கு அருகில் ஊற்றவேண்டும்.
அறுவடை: விதைத்த 60 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகிவிடும். கிழங்குகளில் வட்டமான வெண்மை நிறக்கோடுகள் முழுவதும் பரவுவதற்கு முன்பாக அறுவடை செய்யவேண்டும்.
மகசூல்: விதைத்த 120 நாட்களில் எக்டருக்கு 20-25 டன்கள்.
Share your comments