குறுவைப் பருவத்திற்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்களைத் தேர்வு செய்த நடவு செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
குறுவைப் பருவம்
மதுரை மாவட்டத்தில் சுமார் 40,000 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்குக் குறுவை மற்றும் சம்பா பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை நெல் பருவம் ஜூன் - ஜூலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் முடிவடையும்.
நெல்லுக்கு ஏற்றப் பருவம் (Season for paddy)
குறுவைப்பருவம் குறுகிய கால நெல் வகைகளைச் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட குறுகிய கால நெல் இரங்களான ஏடிடி 45, ஏஎஸ்டி 16, கோ 51, ஏடிடி 53 முதலிய இரகங்கள் மதுரை மாவட்டத்தில் பயிரிடுவதற்கு ஏற்ற குறுவை நெல் இரகங்களாகும்.
110 நாட்கள் (110 days)
53 இரகங்கள் மதுரை மாவட்டத்தில் பயிரிடுவதற்கு ஏற்ற குறுவை நெல் இரகங்களாகும்.
ஏடிடி 45 என்ற நெல் இரகம் 110 நாட்கள் வயதுடையது. ஆனைக்கொம்பனுக்கு எதிர்ப்புத் திறனும் புகையானுக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் உள்ள இரகமாகும். நடுத்தர சன்ன ரக நெல் மற்றும் வெண்மையான அரிசி உடையது. இந்த இரகத்தில்சராசரி மகசூல் 6100 கி/எக்டர் ஆகும்.
ஏஎஸ்டி 16 (AST16)
ஏஎஸ்டி 16 என்ற நெல் இரகம் 110-115 நாட்கள் வயதுடையது. சிறிய குண்டு இரக நெல் மற்றும் வெண்மையான அரிசியை உடையது. குலை நோய்க்கு எதிர்ப்புத் திறன் உள்ளது. மிதமான தூர் கட்டும் திறன் உடையது. ஒரு எக்டருக்கு சராசரியாக 5600 கிலோ மகசூல் கிடைக்கும்.
சிறிய குண்டு இரக நெல் (Small stew type paddy)
சிறிய குண்டு இரக நெல் மற்றும் வெண்மையான அரிசியை உடையது. குலை நோய்க்கு எதிர்ப்புத் திறன் உள்ளது. மிதமான தூர் கட்டும் திறன் உடையது. ஒரு எக்டருக்கு சராசரியாக 5600 கிலோ மகசூல் தரக்கூடியது.
கோ 51 (Co 51)
கோ 51 என்ற நெல் இரகம் 105 நாட்களில் வளரக்கூடிய இரகமாகும். மத்திய சன்ன இரக அரிசியைக் கொண்ட இந்த இரகம் பூச்சி நோய்களின் தாக்கத்தை எதிர்த்து வளரக்கூடிய பண்பு கொண்டது. மேலும் நேரடி நெல் விதைப்பில் பயிரிடக் கூடிய இரகமாகும்.
ஏடிடி 53 (ATT 53)
ஏடிடி 53 என்ற நெல் இரகம் 105 முதல் 110 நாட்கள் வயதுடைய குறுகிய கால நெல் இரகமாகும். குறுவை மற்றும் கோடைப் பருவங்களில் பயிரிட ஏற்ற உயர் விளைச்சல் இரகம். ஒரு எக்டருக்கு சராசரியாக 6334 கிலோ மகசூல் தரக்கூடியது.
நிபுணர்கள் அறிவுறுத்தல் (Expert Advice)
அதிக விளைச்சல் தரக்கூடிய இந்த குறுகிய கால நெல் இரகங்களை விவசாயிகள் பயிரிட்டு பயன்பெற வேண்டும் என மதுரை, வேளாண்மை அறிவியல் நிலையத் தொழில் நுட்ப வல்லுநர் முனைவர் கு.செல்வராணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்விரமேஷ் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்
Share your comments