ஊடுபயிர் சாகுபடி தென்னைக்குக் கூடுதல் மகசூலை அளிக்க வல்லது. அவ்வாறு தென்னையில் எந்தெந்த பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
ஊடுபயிர் தேர்வு (Intercropping selection)
தென்னந்தோப்பில் சாகுபடி செய்ய ஊடு பயிரைத் தேர்வு செய்யும் போது அந்தப்பகுதி தட்பவெப்பநிலை, மண் மற்றும் அந்த விளைப்பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் தென்னை மரங்களின் இலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
7 ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடைய மரங்கள் (Trees less than 7 years old)
அந்தந்த பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 5 ஆண்டுகள் வரை.
உகந்த பயிர்கள் (Optimal crops)
ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்யலாம்.
தவிர்க்க வேண்டிய பயிர்கள் (Crops to avoid)
கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
7-20 ஆண்டுகள் வயதுள்ள தோப்புகள்
இந்தக் காலக்கட்டத்தில் பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை (நேப்பியர் மற்றும் கினியா புல்) பயிர் செய்யலாம்.
20 ஆண்டு மரங்கள் (20 year old trees)
ஒரு பருவப்பயிர் (A seasonal crop)
நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி ஆகியவற்றைச் சாகுபடி செய்யலாம்.
இருபருவப் பயிர் (Biennial crop)
வாழையில் பூவன் மற்றும் மொந்தன் இரகங்கள் ஏற்றவைகளாகும்.
பல ஆண்டு பயிர்கள் (Perennial Crops:)
-
கோகோ, மிளகு (பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா), ஜாதிக்காய் மற்றும் வனிலா.
-
இதில் கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவை பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு ஏற்றவை. வனிலா பயிரிட, நோய் தாக்குதல் இல்லாத நடவு தண்டைப் பயன்படுத்தவேண்டும். மேலும் நட்டபின் நோய் தாக்குதல் பாதுகாக்கவேண்டும்.
பல பயிர் அமைப்பு (Multiple crop system)
-
தென்னையுடன் வாழை, சிறுகிழங்கு, வெண்டை ஆகியவை கிழக்குப் பகுதிகளுக்கு ஏற்றவை.
-
தென்னையுடன் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவற்றை மேற்குப் பகுதிகளில் பயிரிடலாம்.
-
மேலே கூறிய பயிரமைப்புளில் ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு உரம் மற்றும் நிர்பாபசனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க....
அஹா..! அற்புதமான புதிய விவசாய தொழில்நுட்பம் : தென்னை விவசாயம்!
தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!
Share your comments