விதை நெல் இருப்பு, ரகங்கள் குறித்த தகவல்களை அறிய வேளாண் அலுவலர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தற்போதைய பருவத்துக்கு ஏற்ற குண்டு, சன்ன ரக நெல் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
-
இப்போது இருப்பில் உள்ள குண்டு ரகமான ஏ.எஸ்.டீ.16 விதைகள் ஏக்கருக்கு 2,240 கிலோ மகசூல் தரும். 110 முதல் 115 நாள் வயதுடையது.
-
சன்னமான ஐ.ஆர்.20 ரக விதைகள் 130 முதல் 135 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் தரும்.
-
சன்னமான ஏ.டீ.டி.38 ரக விதைகள் 130 முதல் 135 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,480 கிலோ மகசூல் தரும்.
-
சன்னமான ஏ.டீ.டி.39 ரக விதைகள் 120 முதல் 125 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் தரும்.
-
குண்டு ரகமான டி.பி.எஸ்.5 விதைகள் 118 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,520 கிலோ மகசூல் தரும்.
-
சன்னமான பீ.பி.டி.5,204 ரக விதைகள் (சம்பா மசூரி) 145 நாள் வயதுடையவை. ஏக்கருக்கு 2,400 கிலோ மகசூல் தரும்.
-
சன்னமான வெள்ளைப் பொன்னி 135 முதல் 140 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 1,800 கிலோ மகசூல் தரும்.
-
மேலும், சன்னமான கோ.50 ரக விதை 130 முதல் 135 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,535 கிலோ மகசூல் தரும்.
-
சன்னமான கோ 51 ரக விதை, 105 முதல் 110 நாள் வயதுடையவை. ஏக்கருக்கு 2,600 கிலோ மகசூல் கிடைக்கும்.
-
சன்ன ரகமான என்.எல்.ஆர்.34449 விதை 125 நாள் வயதுடையவை. இவை ஏக்கருக்கு 2,600 கிலோ மகசூல் தரும்.
-
சன்னமான டி.கே.எம்.13 ரக விதை 130 நாள் வயதுடையது. ஏக்கருக்கு 2,300 கிலோ மகசூல் தரும்.
இவ்விதைகள் ஈரோடு மற்றும் சித்தோடு துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விதை தேவைப்படும் விவசாயிகள், வேளாண் அலுவலர் 99449 20101 என்ற செல்போன் எண்ணிலும், உதவி வேளாண் அலுவலர்கள் சித்தோடு ரஞ்சித்குமார் 99654 44123, குமார் 9786388610, ஈரோடு சுந்தரராஜ் 97880 90891, கார்த்திகேயன் 99650 53700, சங்கீதா 88700 38607 ஆகியோரை செல்போன் எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பயன்களை அள்ளித்தரும் திரவ உயிர் உரங்கள்- விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments